fbpx

இனி இந்த 3 ராசிக்காரர்களுக்கும் யோகம் அடிக்கப்போகுது..!! பணம் கொட்டப்போகுது..!!

தை பிறந்தால் வழிபிறக்கும் என்பது பழமொழி. அதற்கேற்ப வீட்டில் சுபநிகழ்வுகள், அடுத்த கட்ட முயற்சிகளுக்கு பலரும் திட்டமிட்டு வருகின்றனர். இந்நிலையில், ஜனவரி 18ஆம் தேதியன்று சந்திரன், மேஷ ராசிக்குள் நுழைவதால் சில ராசிகளுக்கு கஜகேசரி யோகத்தை கொண்டு வந்து சேர்க்கும். இந்த யோகம் மிகவும் மங்களகரமானதாகவும், லாபகரமானதாகவும் அமையும் என்கின்றனர் ஜோதிட வல்லுனர்கள். மேஷத்தில் குரு சந்திரனுடன் இணைந்து 3 ராசிகளின் கஜகேசரி ராஜயோகத்தில் இருப்பதால் குறிப்பிட்ட சில ராசிக்காரர்கள் பணமழையில் நனைவார்கள்.

நாளை ஜனவரி 18ஆம் தேதி வியாழன் மேஷ ராசியில் நுழைகிறார். இதனால், எந்தெந்த 3 ராசி க்காரர்களுக்கு இந்த யோகம் அமையும் என்பதை இந்த பதிவில் காணலாம். ஜோதிடத்தின் படி, கிரகங்கள் சூரியனை சுற்றிக்கொண்டே இருக்கின்றன. இதனால் அவைகளின் இயக்கங்களும் மாறிக் கொண்டே இருக்கின்றன. அதன் அடிப்படையில் 12 ராசிகளுக்கும் லாப, நஷ்டங்கள் மாறி மாறி சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாகின்றன. அந்த வகையில் வியாழன் மேஷ ராசியில் நுழையும் போது உருவாகப்போகும் கஜகேசரி யோகத்தால் 3 ராசிகளின் சுப காலம் தொடங்கும்.

மேஷம்

மேஷ ராசியில் தேவகுருவும் சந்திரனும் நேருக்கு நேர் சந்திக்கப் போகின்றனர். இதனால், மேஷ ராசிக்காரர்களுக்கு கஜகேசரி யோகம் உருவாகிறது. இந்த யோகத்தின் தாக்கத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கும். பணியிடத்தில் மரியாதை பெருகும். தொழில் மேம்படும். கணவன்-மனைவிக்குள் அந்நியோன்யம் நீடிக்கும். தொழிலில் பணவரவு அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் பெறுவீர்கள்.

கும்பம்

கும்பராசிக்கு 4ஆம் வீட்டில் கஜகேசரி யோகம் உருவாகப் போகிறது. இதனால் பணம் பல வழிகளில் உங்களை வந்து சேரும். செல்வ செழிப்பில் மிதப்பீர்கள். திடீர் அதிர்ஷ்டத்தால் பணவரவு உண்டாகும். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வரலாம். தொழிலில் புதிய முயற்சிகளில் வெற்றி காணலாம். கொடுக்கல் வாங்கல் அமோகமாக இருக்கும். உறவினர்களால் ஆதாயம் பெறலாம்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு கஜகேசரி யோகத்தால் பணியிடத்தில் பதவி உயர்வு நிச்சயம் கிடைக்கும். பாராட்டுக்களை பெறுவீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். சுப காரியங்களை திட்டமிடும் யோகம் உருவாகும். மனக்குழப்பம் நீங்கி எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். கொடுக்கல் வாங்கல் எதிர்பார்த்த அளவில் இருக்கும். வெளிநாட்டு சுப செய்திகளை பெறுவீர்கள்.

Chella

Next Post

பழுதான பள்ளி கட்டிடங்களை இடித்து தரைமட்டமாக்க உத்தரவு..!! பள்ளிக்கல்வித்துறை அதிரடி..!!

Wed Jan 17 , 2024
அரசு மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை மற்றும் தொடக்கப் பள்ளிகளில் ஒருங்கிணைந்த கல்வி இன்ஜினியர்களால் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகளின் படி, பள்ளிகளில் பழுதடைந்த, இடிக்கப்பட வேண்டிய வகுப்பறைகள், கழிவறைகள் மற்றும் இதர கட்டிட விவரங்கள் கண்டறியப்பட்டு அவை டி.என்.எஸ்.இ.டி. அட்மினிஸ்ட்ரேட்டர்ஸ் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக பழுதடைந்த கட்டிடங்களை இடிக்க வேண்டிய பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகளின் தற்போதைய நிலையை அறிந்து கொள்ளவும், அதனடிப்படையில், தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏதுவாக, […]

You May Like