மும்மொழி கொள்கையை கேள்வி கேட்கும் தவெக தலைவர் விஜய்யின் மகன் எங்கு படித்தார் என்று ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
பாஜக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் கோவையில் நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய, ஹெச்.ராஜா, ”தமிழ்நாடு முழுவதும் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. வருமான வரி உச்சவரம்பு யாரும் எதிர்பார்க்காத அளவில் ரூ.12.75 லட்சமாக நிதியமைச்சர் உயர்த்தி அறிவித்தார். கடைசி பந்தில் வீர தமிழச்சி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சிக்ஸ் அடித்து அசத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் பொழுது போகவில்லை என்றால், மொழி பிரச்சனையை கையில் எடுத்து கொள்வது வாடிக்கையாக உள்ளது. ஸ்டாலின் இருமொழி கொள்கையை ஏற்பவர் என கூறியுள்ளார். அவரின் குடும்பத்தினர் உள்பட திமுக-வினர் நடத்தும் சிபிஎஸ்சி பள்ளிகளில் சமச்சீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என போராட்டத்தில் நான் ஈடுபடுவேன். ஆற்காடு விராசாமி, துரைமுருகன் உள்ளிட்டோர் குடும்பத்தினரின் சிபிஎஸ்இ பள்ளிகள் பட்டியலை 4 ஆண்டுகளுக்கு முன்பே நான் வெளியிட்டேன்.
நீங்கள் பணம் சம்பாதிக்க மும்மொழி. மக்களை ஏமாற்ற இருமொழி நிலைபாடு. மும்மொழி கொள்கையை கேள்வி கேட்கும் தவெக தலைவர் விஜய்யின் மகன் எங்கு படித்தார்..? அவரது மகன் சமச்சீர் பள்ளியில் படித்தாரா? அல்லது இருமொழிக் கொள்கை கொண்ட பள்ளியில் படித்தாரா..? என்று கேள்வி எழுப்பியுள்ளார். நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த பிள்ளைகளை மட்டுமே வேறு மொழி படிக்காதே என விஜய் தடுப்பதாக” ஹெச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.
Read More : அதிர்ச்சி..!! இனி 70 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்காது..!! மத்திய அரசு அதிரடி..!!