லண்டனில் படிக்க சென்றபோது, அங்கு ஆங்கிலத்தில் பேசினீர்களா..? இந்தியில் பேசினீர்களா..? என்பதை மக்களுக்கு சொல்ல வேண்டும் என அண்ணாமலைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை, நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. மும்மொழி கொள்கை தொடர்பாக திமுகவுக்கும் – பாஜகவுக்கும் இடையே கடும் கருத்து மோதல் இருந்து வருகிறது. இதற்கிடையே, நேற்றைய தினம் கரூரில் திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ”பாஜக மாநில தலைவர் நம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தான். காலையில் ஒரு பேச்சு, மதியம் ஒரு பேச்சு, மாலை ஒரு பேச்சு, விடிந்தால் ஒரு பேச்சு என பேசி வருகிறார். அவர் இந்தி குறித்தும் மும்மொழி கொள்கை குறித்தும் இப்போது பேசி வருகிறார். லண்டனில் படிக்க சென்றபோது, அங்கு ஆங்கிலத்தில் பேசினீர்களா..? இந்தியில் பேசினீர்களா..? என்பதை மக்களுக்கு சொல்ல வேண்டும். அதன் பிறகு மும்மொழி கொள்கை குறித்து நாம் பேசலாம்” என்றார்.
மும்மொழி கொள்கையை பொறுத்தவரை தாய் மொழியில் பாடங்கள் கற்பிக்க வேண்டும். கூடுதலாக ஒரு மொழியை கற்பதில் எந்தவொரு தவறும் இல்லை என்று பாஜகவினர் கூறி வரும் நிலையில், இதுபோன்ற திட்டம் இந்தியை மறைமுகமாகத் திணிக்கும் முயற்சி என்று தமிழக அரசியல் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். உலக நாடுகளுடன் தொடர்பு கொள்ள ஆங்கிலம் இருக்கும் போது 3-வது மொழியை கற்பிக்க வேண்டிய அவசியம் என்ன என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Read More : இப்போ தெரியுதா என் பசங்க யாருன்னு..? அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்..!!