fbpx

”கட்சியின் அடையாளத்தை லைசன்சா பயன்படுத்துறீங்க”..!! ”திமுக என்றால் கொம்பு முளைத்தவர்களா”..? ”வெட்கமா இல்லையா”..? போட்டுத் தாக்கிய எடப்பாடி பழனிசாமி

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே டாஸ்மாக் கடை ஒன்றில் கள்ளச்சாரயம் விற்கப்படுவதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த வீடியோ ஒன்றையும் அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், மரக்காணம் மரணங்களில் இருந்தோ, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களில் இருந்தோ ஸ்டாலின் மாடல் அரசு ஒரு பாடம் கூட கற்கவில்லையா..? “போலீஸுக்கு பணம் கொடுத்து தான் விற்கிறோம்” என்று தைரியமாக சொல்லும் அளவிற்கு கள்ளச்சாராய விற்பனையை நிறுவனமயப்படுத்தியுள்ளதற்கு வெட்கப்பட வேண்டும்.

போதாக்குறைக்கு, “திமுக கட்சிக்காரன்” எனும் அடையாளம் வேறு. திமுக என்றால், இரண்டு கொம்பு முளைத்தவர்களா? அவர்கள் தவறு செய்தால் காவல்துறை கண்டுகொள்ளாதா..? ஆட்சி வந்ததும், உங்கள் கட்சி அடையாளத்தை லைசன்சாக பயன்படுத்தி, சகல குற்றங்களையும் திமுகவினர் செய்து வருகின்றனர்.

உடனடியாக இந்த கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபடுவோர் அனைவரையும் கைது செய்ய வேண்டும். எந்தவித அரசியல் குறுக்கீடும் இன்றி அனைவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராயத்தை ஒழிக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Read More : கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தது 30 பேர் இல்ல.. 2,000 பேர்..!! உண்மை மறைக்கும் அரசு..!! மாநிலங்களவையில் பரபரப்பை கிளப்பிய எம்பி..!!

English Summary

Edappadi Palaniswami has said that the news that counterfeit liquor is being sold at a TASMAC shop near Athur in Salem district is shocking.

Chella

Next Post

”உங்களுக்கு ஒரு மாசம் தான் டைம்”..!! ”அதுக்குள்ள இந்த வேலையை முடிச்சிருங்க”..!! நிர்வாகிகளுக்கு அதிரடி உத்தரவுபோட்ட விஜய்..!!

Wed Feb 5 , 2025
Tamil Nadu Victory Party leader Vijay has issued a sweeping order to appoint administrators for cities, unions and districts within the next month.

You May Like