உதவிப் பேராசிரியர் பணிக்கான யுஜிசி நெட் தேர்வுக்கு அக்டோபர் 28-ம் வரை விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தேசிய தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ள அறிவிப்பில்: யுஜிசி நெட் தேர்வு டிசம்பர் 6 முதல் 22-ம் தேதி வரை நடைபெறும். மொத்தம் 83 பாடங்களுக்கு பல்வேறு கட்டங்களாக தேர்வு நடத்தப்படும். பட்ட படிப்பு முடித்த நபர்கள் ugcnet.nta.nic.in என்ற இணையதளம் வழியாக 28-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் செலுத்த 29-ம் தேதி கடைசி நாளாகும்.
30, 31 ஆகிய தேதிகளில் விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம். டிசம்பர் முதல்வாரத்தில் ஹால்டிக்கெட் வெளியிடப்படும். பாடத்திட்டம் உட்பட கூடுதல் தகவல்களை www.nta.ac.in எனும் இணையதளம் மூலமாக தெரிந்து கொள்ளலாம். மேலும் தகவல் பெற 011-69227700 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.