fbpx

TRB: இடைநிலை ஆசிரியர்‌ தேர்வுக்கு மார்ச் 20-ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம்…!

இடைநிலை ஆசிரியர்‌ தேர்வுக்கு மார்ச் 20-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்; ஆசிரியர்‌ தேர்வு வாரியம்‌ மூலம்‌ இடைநிலை ஆசிரியர்‌ – 2024 ஆம்‌ ஆண்டிற்கான காலிப் பணியிடங்களுக்கு போட்டித்‌ தேர்வு மூலம்‌ நேரடி நியமனம்‌ செய்வதற்கு அறிவிக்கை பிப்ரவரி 9-ம் தேதி அன்று வெளியிடப்பட்டது. விண்ணப்பதாரர்கள்‌ இணையவழி விண்ணப்பங்களை பதிவேற்றம்‌ செய்ய இன்று மாலை 5.00 மணி வரை கால அவகாசம்‌ வழங்கப்பட்டது.

இந்நிலையில்‌, விண்ணப்பதாரர்கள்‌ பலரும்‌ இணையவழியாக விண்ணப்பம்‌ பதிவேற்றம்‌ செய்ய கூடுதல்‌ கால அவகாசம்‌ கோரினர்‌. அதன் அடிப்படையில்‌ மேற்காண்‌ பணியிடங்களுக்கு இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள்‌ பதிவேற்றம்‌ செய்ய கடைசித் தேதி 20.03.2024 மாலை 5 மணி வரை நீட்டிக்கப்படுகிறது.

மேலும்‌, விண்ணப்பதாரர்கள்‌ தங்களது இணையவழி விண்ணப்பத்தில்‌ திருத்தம்‌ (Edit Option) மேற்கொள்ளவும்‌ அவகாசம்‌ வழங்க கோரியதின்‌ அடிப்படையில்‌, இடைநிலை ஆசிரியர்‌ பணியிடத்திற்கு விண்ணப்பித்து கட்டணம்‌ செலுத்தியவர்கள்‌ தங்களின்‌ விண்ணப்பத்தில்‌ திருத்தம்‌ (Edit Option) மேற்கொள்ள விரும்பினால்‌ 21.03.2024 முதல்‌ 23.03.2024 மாலை 5 மணி வரை திருத்தம்‌ செய்யலாம். இதற்காக ஆசிரியர்‌ தேர்வு வாரிய இணையதளத்தில்‌ வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

Job | 5ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும்..!! ரூ.35,000 சம்பளத்தில் தமிழ்நாடு அரசு துறையில் வேலை..!!

Fri Mar 15 , 2024
தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2,299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனம் : தமிழ்நாடு வருவாய்த் துறை பணி : கிராம உதவியாளர் மொத்த காலியிடங்கள் : 2299 மாவட்டங்கள் வாரியான காலியிடங்கள் விவரம் : அரியலூர் – 21, சென்னை – 20, செங்கல்பட்டு-41, கோயம்புத்தூர்-61, கடலூர் – 66, திண்டுக்கல் – 29, தருமபுரி – 39, தூத்துக்குடி – 77, தேனி-25, […]

You May Like