இந்தியாவில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தாண்டுக்கான நீட் தேர்வுக்கு இன்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மார்ச் 9ஆம் தேதி இரவு 9 மணி வரை நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு மே 5ஆம் தேதி நடைபெறவுள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு முதல் நடைபெறும் இத்தேர்வு, 2017 முதல் தொடர்ச்சியாக 8-வது ஆண்டாக தமிழ்நாட்டில் நடைபெறவுள்ளது.