fbpx

அரசு சார்பில் TRB தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு…! விண்ணப்பிக்க கடைசி நாள் எப்பொழுது…? முழு விவரம்

தமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்பில் சேர விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் பட்டதாரி ஆசிரியர் தேர்விற்கு (http://www.trb.tn.gov.in) என்ற இணையதளத்தில் 01.11.2023 முதல் 30.11.2023 வரை விண்ணப்பிக்கலாம்.

இத்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் தருமபுரியில் 22.11.2023 முதல் நடைபெற்று வருகிறது. இப்பயிற்சி வகுப்பில் சேர விருப்பம் உள்ளவர்கள் https://tinyurl.com/mvrz55zu என்ற இணையதளத்தில் தங்களை பதிவு செய்துக் கொள்ள வேண்டும். மேலும் தொலைபேசி எண் 04342-296188 வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம். தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஆசிரியர் தகுதி தேர்வு தாள்-II-இல் தேர்ச்சிபெற்ற தகுதி வாய்ந்த நபர்கள் இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

அதிரடி..! தனிப்பட்ட இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் "ஸ்டிக்கர்" ஒட்ட தடை...! தீவிர நடவடிக்கை எடுக்க உத்தரவு...!

Tue Nov 28 , 2023
தனிப்பட்ட இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் POLICE ஸ்டிக்கர் பயன்படுத்துவதற்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. அருண் அனைத்து காவல் ஆணையர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில்; தனிப்பட்ட இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் POLICE ஸ்டிக்கர் பயன்படுத்துவதற்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கிறார்களா என்பதை காவல்துறை கண்காணிப்பாளர்கள் உறுதி […]

You May Like