தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் ஆகிய காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
காலி பணியிடங்கள்: டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்: 1, அலுவலக உதவியாளர்: 2 என மொத்தம் மூன்று காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
கல்வி தகுதி:
* அலுவலக உதவியாளர் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இருசக்கர வாகனம் ஓட்ட தெரிந்தவராக இருத்தல் வேண்டும்.
* டேட்டா என்ட்ரி பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்று இருக்க வேண்டும். தட்டச்சு (லோயர்) ஆங்கிலம் மற்றும் தமிழ் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி MS ஆபீஸ் அனுபவம் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
சம்பளம்: டேட்டா என்ட்ரி பணியிடத்திற்கு மாதம் ரூ.15,000 மட்டுமே தொகுப்பூதியம் வழங்கப்படும். அலுவலக உதவியாளர் பணிக்கு மாதம் ரூ.8000 வழங்கப்படும். இப்பணியிடம் தொகுப்பூதிய அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமானது ஆகும். இப்பணியிடம் 11 மாத காலத்திற்கு மட்டுமே அனுமதிக்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: இதற்கு விண்ணப்பிப்பதற்கு பிப்ரவரி 15 2025 கடைசி நாளாகும்.
Read more : “கோழி” பறவையா.. விலங்கா..? குஜராத் உயர் நீதிமன்றம் கூறியது என்ன..? அறிவியல் சொல்வது…