தற்போதைய உலகில் பணத்தை எளிதாக அணுக கிரெடிட் கார்டுகள் பெரிய அளவில் உதவுகின்றன. ஷாப்பிங் செய்வது முதல் பல்வேறு வகையான தேவைகளைப் பூர்த்தி செய்வது வரை கிரெடிட் கார்டுகள் பலவிதமான நன்மைகளை அளிக்கிறது. பொதுவாக ஒரு நபரின் இன்கம் ப்ரூஃப் மற்றும் கிரெடிட் ஸ்கோரை வெரிஃபை செய்த பிறகே பெரும்பாலும் விண்ணப்பதாரர்களுக்கு கிரெடிட் கார்டுகள் வழங்கப்படுகின்றன. இன்கம் ப்ரூஃப்-ஆக சமர்ப்பிக்க உங்களிடம் தேவையான ஆவணங்கள் இல்லாமல் போனால் என்ன செய்வது? அது பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம்.
இன்கம் ப்ரூஃப் இல்லாமல் கிரெடிட் கார்டு பெறுவது எப்படி?
நீங்கள் ஒரு ப்ராப்பர்ட்டியை வாடகைக்கு விட்டிருந்தாலோ அல்லது உங்களுக்கு வழக்கமான முறையில் வருமானம் தரக்கூடிய முதலீடுகள் ஏதேனும் இருந்தாலோ, அதுவும் உங்களது வருமானத்தில் சேர்க்கப்படும். அதனை ஒரு இன்கம் சோர்ஸாக நீங்கள் காட்டலாம்.
உதவியை நாடலாம்:
ஒருவேளை உங்களால் வருமான சான்றிதழை சமர்ப்பிக்க முடியாமல் போனால், உங்கள் குடும்பத்தில் இருக்கக்கூடிய ஒரு நபரின் உதவியை நாடலாம். உங்களது வாழ்க்கைத் துணை அல்லது பெற்றோருடன் சேர்ந்து கோ-சைன் செய்யலாம். அதாவது கிரெடிட் கார்டுக்கு இரண்டு நபர்களும் கோ-அப்ளிகன்ட்டாக இருப்பதன் மூலமாக கிரெடிட் கார்டு பெற்றுக் கொள்ளலாம்.
ஸ்டுடன்ட் கார்டு :
ஒரு சில வங்கிகளில் மாணவர்களுக்காகவே சில கார்டு ஆப்ஷன்கள் உள்ளன. இந்த கார்டை பெறுவதற்கு ஒரு வழக்கமான வேலை இருக்க வேண்டிய அவசியம் இல்லை. குறைந்த அளவு செலவு செய்யும் லிமிட் உடனான கார்டு இந்த சூழ்நிலையில் உங்களுக்கு வழங்கப்படும். வருமான சான்றிதழ் இல்லாமல் உங்கள் கிரெடிட் ஹிஸ்ட்ரியை வளர்த்துக் கொள்வதற்கு இதனை ஒரு நல்ல வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
உங்களது சேமிப்புகளை காட்டவும்:
நீங்கள் சேர்த்து வைத்த பணத்தை ஒரு குறிப்பிடத்தக்க அளவு முதலீடாக வங்கியிடம் காட்டி, கிரெடிட் கார்டு வழங்க சொல்லி நீங்கள் கேட்கலாம். எனினும் இறுதி முடிவு கார்டு வழங்குனர் எடுப்பது தான்.
உங்களது பேங்கிங் ஹிஸ்ட்ரியை பயன்படுத்தவும் :
நீங்கள் ஒரு நல்ல கஸ்டமராக ஆரோக்கியமான ஒரு தொடர்பை உங்கள் வங்கியோடு உருவாக்கி இருக்கிறீர்கள் என்றால் உங்கள் வங்கி உங்களை நிச்சயமாக நம்பும். உங்களது அக்கவுண்டை நீங்கள் மேனேஜ் செய்யும் விதத்தை பொறுத்து கிரெடிட் கார்டு வழங்கும் முடிவை வங்கிகள் எடுக்கலாம்.
சுய தொழில் டேக்ஸ் ரிட்டன் டாக்குமென்ட்ஸ்:
நீங்கள் ஒரு பிசினஸை நடத்தி வருகிறீர்கள் என்றால், உங்களது வருமானத்தை நிரூபிக்க நீங்கள் வருமான வரி ரெக்கார்டுகளை கூட காட்டலாம். இதில் இருக்கக்கூடிய ஆண்டுவாரியான ஃபினான்ஷியல் ஸ்டேட்மென்ட் மூலமாக வங்கிகள் உங்களது வருமானத்தை புரிந்து கொள்ளும்.
FD வைத்து கிரெடிட் கார்டு:
ஃபிக்சட் டெபாசிட் செய்யும் நபர்களுக்கு ஒரு சில வங்கிகள் கார்டை கொடுக்கலாம். இந்த டெபாசிட்டை செக்யூரிட்டியாக கருதி உங்களுக்கு கிரெடிட் கார்டு வழங்க சொல்லி நீங்கள் வங்கியில் கேட்கலாம். மேலும், இந்த ஃபிக்சட் டெபாசிட் அடிப்படையில் உங்களது லிமிட்டை அமைத்து நீங்கள் உங்கள் கிரெடிட் கார்டு மூலமாக எவ்வளவு செலவு செய்யலாம் என்பதை வங்கி முடிவு செய்யும்.
ஃபேமிலி கிரெடிட் கார்டு:
உங்களிடம் ஃபேமிலி கார்டு இருந்தால் அந்த கார்டில் நீங்கள் ஒரு யூஸராக இணைந்து கொள்ளலாம். இதற்கு நீங்கள் உங்கள் வருமானத்தையோ அல்லது உங்கள் கிரெடிட் ரிப்போர்ட்டையோ காண்பிக்க வேண்டிய அவசியமில்லை. ஒரிஜினல் கார்டு ஹோல்டரின் டாக்குமென்ட்ஸ்களே போதுமானது.