இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI) ஆதார் அட்டை வழங்கப்படுகிறது.. மேலும் இது இந்தியாவில் மிகவும் முக்கியமான மற்றும் பரவலாகப் பயன்படுத்தப்படும் அடையாள அட்டைகளில் ஒன்றாகும். ஆதார் அட்டையில் தனிநபரின் பெயர், பாலினம், பிறந்த தேதி, புகைப்படம் மற்றும் முகவரி ஆகியவை அடங்கும். UIDAI இணையதளம், அட்டைதாரர்கள் தங்கள் பெயர், தொலைபேசி எண் மற்றும் ஆதார் அட்டையில் உள்ள முகவரியை மாற்ற அனுமதிக்கிறது.
ஆனால் உங்கள் ஆதார் அட்டையில் உங்களுடைய பழைய படம் இருப்பதாக உணர்ந்தாலோ அல்லது அதில் உள்ள தோற்றம் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றாலோ உங்கள் பழைய புகைப்படத்தை புதியதாக மாற்றலாம்.. நீங்கள் அருகிலுள்ள ஆதார் பதிவு மையத்திற்கோ அல்லது ஆதார் சேவா கேந்திராவோ தங்கள் அட்டையில் உள்ள தொடர்புடைய தகவல்களை மாற்றிக்கொள்ளலாம்.
இதேபோல், ஆதார் அட்டையில் உங்கள் புகைப்படத்தை மாற்றுவதற்கும் புதுப்பிப்பதற்குமான விருப்பத்தை ஆதார் ஆணையம் வழங்குகிறது. இதற்கு, நீங்கள் ஆதார் பதிவு மையம்/ஆதார் சேவை மையத்திற்கு செல்ல வேண்டும்.. இல்லையெனில் UIDAI இணையதளம் மூலம் ஆன்லைனில் செய்யலாம். எனவே ஆதார் அட்டையில் உங்கள் பழைய புகைப்படத்தை புதிய புகைப்படத்துடன் மாற்றுவது எப்படி என்பதை பார்க்கலாம்.
ஆதார் அட்டையில் உங்கள் புகைப்படத்தை மாற்றுவது எப்படி..?
- முதலில், UIDAI-ன் uidai.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்
- போர்ட்டலில் இருந்து ஆதார் பதிவு படிவத்தை பதிவிறக்கவும்.
- படிவத்தில் தேவையான விவரங்களை உள்ளிடவும், புகைப்படத்தை மாற்றுவதற்குத் தேவையான தொடர்புடைய பிரிவுகளை மட்டும் நிரப்பவும்.
- அருகிலுள்ள ஆதார் பதிவு மையத்தில் படிவத்தை சமர்ப்பிக்கலாம்.
- நிர்வாகி உங்கள் விவரங்களை பயோமெட்ரிக் சரிபார்ப்பு மூலம் உறுதி செய்வார்.
- ஆதார் பதிவு மையமத்தில் நிர்வாகி உங்களின் புதிய புகைப்படத்தை எடுப்பார்.
- புகைப்படத்தை மாற்றும் சேவைக்கு நீங்கள் ரூ.100+GST செலுத்த வேண்டும்.
- புதுப்பிப்பு கோரிக்கை எண்ணுடன் (URN) ஒப்புகை சீட்டையும் பெறுவீர்கள்.
- UIDAI இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நிலையை சரிபார்க்க URN- ஐப் பயன்படுத்தவும்.
ஆதார் அட்டைக்காக உங்கள் புகைப்படத்தை எடுக்க ஆதார் பதிவு மையத்திற்கு செல்ல வேண்டும். இந்த வழியில் நீங்கள் UIDAI மூலம் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த புதுப்பிப்பு 90 நாட்கள் வரை ஆகலாம் என்பது குறிப்பிடத்தக்கது.