fbpx

Ration: வரிசையில் நிற்க அவசியம் இல்லை…! இனி வீட்டில் இருந்தே ரேஷன் பொருட்களை பார்க்கலாம்…!

ரேஷன் கடையில் உள்ள உணவு பொருட்களின் இருப்பை பதிவு செய்த மொபைல் போன் எண்ணில் இருந்து எஸ்எம்எஸ் அனுப்பி தெரிந்துக் கொள்ளலாம்.

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் அனைத்து பொருட்களையும் ஒரே தவணையாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. ஆனால், ஊழியர்கள் அதனை பின்பற்றாமல் அரிசி தனியாக, சர்க்கரை தனியாக வழங்குவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகிறது. இதனை தடுக்க TNePDS செயலி உள்ளது. மக்கள் இதன் மூலம் கடைகளில் எவ்வளவு இருப்பு உள்ளது, நாம் எவ்வளவு வாங்கியிருக்கிறோம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

மேலும் ரேஷன் கடையில் உள்ள உணவு பொருட்களின் இருப்பை பதிவு செய்த மொபைல் போன் எண்ணில் இருந்து எஸ்எம்எஸ் அனுப்பி தெரிந்துக் கொள்ளலாம். சில நேரங்களில் ரேஷன் கடைகளில் பொருட்கள் இருந்தாலும் சில ஊர்களில் உள்ள ஊழியர்கள் இருப்பு குறைவாக இருப்பதாக கூறி, குறைவாக பொருட்கள் வழங்குவதாக புகார் எழுகின்றன.

ரேஷன் கடையில் உள்ள பொருட்களின் விவரத்தை தெரிந்துக்கொள்ள PDS என டைப் செய்து இடைவெளி விட்டு 101 என டைப் செய்து 97739 04050 என்ற எண்னுக்கு எஸ் எம் எஸ் அனுப்பலாம். அதே முறையில் பிடிஎஸ் இடைவெளி விட்டு 102 என டைப் செய்து எஸ்எம்எஸ் அனுப்பி கடை திறந்துள்ளதா இல்லையா என அறிந்துக் கொள்ளலாம்.

Vignesh

Next Post

LLR பெற இ-சேவை மையங்களில் கூடுதலாக ரூ.60 கட்டணம் செலுத்த வேண்டும்...! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு...!

Thu Mar 14 , 2024
வாகனம் ஓட்ட LLR பெற இ-சேவை மையங்களில் கூடுதலாக ரூ.60 கட்டணம் செலுத்த வேண்டும். இடைத்தரகர்களுக்கு அதிக தொகை செலுத்துவதைத் தவிர்க்கும் வகையில், ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர், தமிழ்நாடு முழுவதும் உள்ள இ-சேவை மையங்களில், 60 ரூபாய் சேவைக் கட்டணமாகச் செலுத்தி, கற்றல் உரிமத்திற்கு (LLR) பதிவு செய்து கொள்ளலாம். எல்.எல்.ஆர்.க்கு விண்ணப்பிக்க டிரைவிங் ஸ்கூல்கள், பிரவுசிங் சென்டர்களை மட்டுமே பொதுமக்கள் சார்ந்திருப்பதை தவிர்க்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. […]

You May Like