fbpx

மின் கட்டணத்தை பாதியா குறைக்கலாம்!… எப்படி தெரியுமா?… சூப்பர் ஐடியா!

பல வீடுகளில் ஒவ்வொரு முறையும் மின் கட்டணத்தை குறைக்க என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருப்பார்கள். அவர்கள் சில வழிமுறைகளைப் பின்பற்றி சிறிய மாற்றங்களைச் செய்துகொண்டால், மின்கட்டணம் தற்போது உள்ளதைவிட பாதியாகக் குறையும். வீட்டில் டியூப் லைட்டுக்குப் பதிலாக LED பல்பு அல்லது LED ட்யூப் லைட்டை பயன்படுத்தலாம். 2 வாட்ஸ் முதல் 40 வாட்ஸ் வரை LED பல்புகள் கிடைக்கின்றன. LED டியூப் லைட்டுகளும் குறைவான விலையில் கிடைக்கின்றன.

பழைய ஃபேன் பயன்பாட்டில் இருந்தால், அதுவும் மின்கட்டணம் உயரக் காரணமாக இருக்கலாம். பழைய மாடல் மின்விசிறியை உடனே மாற்றிவிடுவது நல்லது. அவை 100-140 வாட்ஸ் மின்சாரத்தை நுகர்பவை. ஆனால், தற்போது சந்தையில் கிடைக்கும் BLDC வகை மின்விசிறிகள் 40 வாட்ஸ் மின்சாரத்தை மட்டுமே பயன்படுத்துகின்றன. சாதாரண ஏசி பயன்படுத்துபவர்கள் இன்வெர்ட்டர் ஏசிக்கு மாறலாம். வழக்கமான விண்டோ அல்லது ஸ்பிலிட் ஏசிக்குப் பதிலாக இன்வெர்ட்டர் ஏசி பொறுத்தினால் மின்சார கட்டணம் குறைவதைக் கண்கூடாகப் பார்க்க முடியும்.

Kokila

Next Post

சட்டம் இயற்றும் அங்கீகாரத்தை ஆளுநர் நசுக்கக் கூடாது..!! உச்சநீதிமன்றம் காட்டம்..!!

Fri Nov 24 , 2023
சட்டப்பேரவைகளில் சட்டம் இயற்றும் அங்கீகாரத்தை ஆளுநர்கள் நசுக்க கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. பஞ்சாப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுப்பதாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எதிராக ஆம் ஆத்மி தலைமையிலான அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடுத்திருந்தது. இதில், ஜூன் 19, 20 மற்றும் அக்டோபர் 20 ஆகிய தேதிகளில் நடைபெற்ற பஞ்சாப் பேரவை அமர்வுகளின் செல்லுபடி குறித்து சந்தேகம் எழுப்ப ஆளுநருக்கு சட்ட அதிகாரம் இல்லை […]

You May Like