வேலையே இல்லாமல் சம்பளம் மட்டும் கிடைக்கிறது என்றால் யாருக்கு தான் பிடிக்காது. எல்லாரும் ஒரு முறையாவது அப்படி ஒரு வேலை கிடைத்தால் போய்விடலாம் என்று நினைப்பர். ஜாலியாக இருந்துகொண்டு வேலையும் முடித்துக்கொண்டு லட்சக்கணக்கில் சம்பளம் கிடைத்தால் நன்று தானே? உலகில் இதுபோன்ற 5 வேலைகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
அத்தகைய வேலைகளில் முதல் வேலை சாக்லேட்டை சுவைப்பது. சாக்லேட் சாப்பிடுவது எல்லாம் வேலையா என்று கேட்கிறீர்களா? சில நிறுவனங்களில் சாக்லேட்டின் மணம், சுவை, நிறம் ஆகியவற்றைப் பார்த்து, அதன் பீட்பேக்குகளை வைத்து தான் வேலை. கோடிவா சாக்லேட் தயாரிக்கும் நிறுவனம் அத்தகைய பணியாளர்களுக்கு 30 முதல் 60 ஆயிரம் டாலர்கள், அதாவது 25 முதல் 50 லட்சம் வரையிலான சம்பள பேக்கேஜ் கொடுக்கிறது.
மற்றொரு வேலை தண்ணீரில் டைவிங் அடிப்பது. இந்த வேலையில், 30 ஆயிரம் டாலர்களுக்கு மேல் அதாவது 25 லட்சம் பேக்கேஜ் கிடைக்கிறது. இது வாட்டர் ஸ்லைடு டெஸ்டர் என்று அழைக்கப்படுகிறது. இதில், செயற்கை நீர் ஊற்றுகளில் உள்ள சரிவை பரிசோதித்து, நீரின் தரத்தை சரிபார்க்க வேண்டும். சர்ஃபிங் ஆர்வலர்களுக்கு இது சிறந்த வேலை.
படுக்கையில் தூங்குவதை விட சிறந்தது எது? அதையே வேலையாகக் கொடுத்தால்..? ஆடம்பர படுக்கைகள் தயாரிக்கும் நிறுவனமான சிமோன் ஹார்ன் லிமிடெட், படுக்கைகளை அறிமுகப்படுத்துவதற்கு முன் அதன் தரத்தை சரிபார்க்க பணியாளர்களை நியமிக்கின்றனர். படுக்கையில் படுத்து உறங்கும் வேலைக்கு லட்சக்கணக்கான ரூபாய் சம்பளம் கொடுக்கப்படுகிறது.
சீனாவில், பல நிறுவனங்கள் தாங்கள் ஒரு பெரிய நிறுவனம் என்று காட்டிக்கொள்ள அதிகாரிகளைப் போல உடை அணிவதற்காக மட்டுமே வேலைக்கு ஆள் எடுக்கின்றன. இவர்கள் போலி நிர்வாகிகள் என்று அழைக்கப்படுகிறார்கள். நிறுவனத்தைப் பற்றிய நல்ல அபிப்ராயத்தைப் பெறுவதற்காக மட்டுமே அவர்கள். வேலை ஒன்றும் இல்லை. அதுமட்டும் இல்லாமல் இங்கு காதலன், காதலியாக நடிக்க கூட பணம் தருகிறார்கள்.
பாண்டா உலகின் அழகான உயிரினங்களில் ஒன்றாகும். சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் அமைந்துள்ள ஆராய்ச்சி மையத்தில் கரடியைப் பார்த்துக்கொள்ளும் பணிக்கு 32 ஆயிரம் டாலர்கள் அதாவது 26 முதல் 27 லட்சம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படுகிறது.