fbpx

50,000 ரூபாய் வரை சம்பாத்திக்கலாம் பட்டப் படிப்பு படித்தவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்!!!

தமிழகத்தில் படித்த பட்டதாரி இளைஞர்கள் பலர் வேலை வாய்ப்பு இன்றி தவித்து வருகிறார்கள். இன்னும் சொல்லப் போனால், பட்டப்படிப்பு முடித்தவர்கள் ஒரு சாதாரண வேலை வாய்ப்பு அறிவிப்பு முகாமில் போய் நின்றால், அதிகம் படித்தவர்களுக்கு இங்கே வேலை இல்லை என்று தெரிவித்து விடுகிறார்கள். அதிலும் பொறியியல் படித்தவர்கள் லட்சோப லட்சம் பேர் தற்போது வேலையின்றி மன உளைச்சலுக்கு ஆளாகி வருகிறார்கள்.

அப்படி வேலை வாய்ப்பு இல்லாமல் மன உளைச்சலில் இருப்பவர்களுக்கு தற்போது ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதாவது, தமிழக அரசு புத்தாக்கம் நிறுவனம் சுய தொழில் ஆரம்பிப்பதை ஊக்குவிக்கும் விதத்தில் செயல்படும் தமிழ்நாடு சுய தொழில் தொடங்கும் மற்றும் புத்தாக்கம் திட்டம், குறு மற்றும் சிறு தொழில் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இருக்கின்ற காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்சமயம் தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிறுவனத்தில் திட்ட இணையாளர் பதவிக்கு 13 இடங்கள் காலியாக இருக்கின்றன. அதேபோல 25,000 ரூபாயிலிருந்து 50,000 ரூபாய் வரையில் ஊதியம் வழங்கப்படுகிறது.இந்த நிறுவனத்தில் காலியாக இருக்கின்ற பணியிடம் மற்றும் எண்ணிக்கை தொடர்பாக இங்கே காணலாம்.

Project Associate – Fablabs – Tech Assistant 3
Project Associate – Investment Initiatives 2
Project Associate – Incubation & Acceleration 1
Project Associate – Regional Startup Hub 3
Project Associate – Community Initiatives 1
Project Associate – Project Management Unit 3

மேலும் இந்த பணியை மேற்கொள்வதற்கு ஒரு நபருக்கு நிச்சயமாக தொழில் ஆரம்பிப்பது தொடர்பான தெளிவான பார்வை தேவை என்று கூறப்படுகிறது. ஒரு குழுவை வழி நடத்துவதற்கான திறமையை பெற்றிருக்க வேண்டும். தொழிற்சாலைகள் மற்றும் நவீன தொழில்நுட்பம் தொடர்பான அறிவு மற்றும் அதன் கருவிகள் தொடர்பான பயன்பாடு பற்றி தெளிவான பார்வை இருக்க வேண்டும்.

தொழில் ஆரம்பித்தல் தொடர்பான திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான திறன் இருக்க வேண்டும் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள வேலை வாய்ப்பு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் இந்த பதவியில் அமர்வதற்கு ஏதாவது ஒரு பிரிவில் இளங்கலை பட்டம் அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பம் செய்பவர்களின் சுயவிவர பட்டியலின் அடிப்படையில் தகுதி பெற்றவர்கள் தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அவர்களுக்கு தொழில்நுட்ப சுற்று மற்றும் HR நேர்காணல் உள்ளிட்டவை நடத்தப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

அத்துடன் இந்த பணியில் அமர ஆர்வமாக இருப்பவர்கள், அதிகாரப்பூர்வமான வலைதளத்தில் சென்று இதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தேவைப்படும் ஆவணங்களுடன் இணைத்து பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இதற்கு எந்தவிதமான கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது.

Forms.zohopublic.in என்ற இணையதளத்தில் சென்று இந்த வேலைக்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தமிழக அரசு சார்பாக கூறப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு.

Kathir

Next Post

பரபரப்பு...! மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்...! 1,500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு...!

Wed Dec 7 , 2022
உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஷாஹி மஸ்ஜித் இத்காவிற்குள் ஹனுமான் சாலிசாவை ஓத வேண்டும் என்று அகில பாரத இந்து மகாசபாவின் அழைப்பைத் தொடர்ந்து, அதிகாரிகள் செவ்வாயன்று உத்தரபிரதேசத்தின் மதுராவில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். “புதிய பாரம்பரியம் அல்லது சடங்குகள் எதுவும்” அனுமதிக்கப்படாது என்று மாவட்ட காவல்துறைத் தலைவர் வலியுறுத்தினார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஸ்ரீ கிருஷ்ணா ஜென்மஸ்தான் கோவில் மற்றும் கோவில் நகரத்தில் உள்ள ஷாஹி மஸ்ஜித் […]

You May Like