சுங்கச்சாவடிகளில் எளிதாக கட்டணம் செலுத்தும் வகையில் மத்திய அரசு Fastag முறையை அறிமுகம் செய்தது. இதனால், வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. பேடிஎம் வாலட்டில் பணம் இருந்தால் அல்லது பாஸ்டேக் அக்கவுண்டில் பணம் இருந்தால் உடனடியாக ஆன்லைனில் செலுத்தலாம். இதுவரை நீங்கள் உங்கள் வாகனத்தில் பாஸ்டேக் பொருத்தாமல் இருந்தால், பேடிஎம் மூலம் எளிமையாக பேடிஎம் அக்கவுண்டை நிறுவி விடலாம்.
PayTm மூலம் FasTag ஓபன் செய்வது எப்படி?
வாகன உரிமையாளராக இருந்து Paytm-ஐப் பயன்படுத்தினால், எளிமையாக Fastag அக்கவுண்ட் ஓபன் செய்யலாம். மிக சிறிய வழிமுறைகளைப் பின்பற்றினாலே போதும். ஆன்லைனில் பேடிஎம் மூலம் Fastag ஓபன் செய்வது எப்படி? என்பதை இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.
PayTm மூலம் FasTag ஓபன் செய்வது எப்படி..?
* முதலில் Paytm செயலியைத் திறக்க வேண்டும்.
* இப்போது நீங்கள் டிக்கெட் முன்பதிவு பிரிவுக்குச் செல்ல வேண்டும்
* அங்கே நீங்கள் பல விருப்பங்களைப் பெறுவீர்கள்
* நீங்கள் இங்கே ஃபாஸ்டேக் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்
* இப்போது நீங்கள் உங்கள் வாகன விவரங்களை உள்ளிட வேண்டும்
* விவரங்களைப் பூர்த்தி செய்தவுடன், பணம் செலுத்துவதற்கான விருப்பத்தைப் பார்ப்பீர்கள்
* கட்டணத்திற்கு கீழே முகவரியை நிரப்புவதற்கான விருப்பத்தையும் நீங்கள் பெறுவீர்கள்
* முகவரி மற்றும் கட்டணத்தை பூர்த்தி செய்த பிறகு, இந்த ஃபாஸ்டேக் ஓபன் செய்யப்படும்.