இந்தியாவில் உள்ள மிகவும் நம்பகமான பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான எல்.ஐ.சி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு பாலிசிகளை வழங்குகிறது. அந்த வகையில் எல்ஐசி சமீபத்தில் புதிய ஜீவன் சாந்தி திட்டத்தை புதுப்பித்துள்ளது.. எல்.ஐ.சி-யின் புதிய ஜீவன் சாந்தி என்பது ஒரு நிலையான மாதாந்திர காலாண்டு, அரையாண்டு அல்லது வருடாந்திர பணப்புழக்கத்துடன் முன்கூட்டியே ஓய்வு பெறுவதற்கான ஒரு சிறந்த தேர்வாகும்.

இந்த திட்டத்தில் ஒருவர் பாலிசியை குறிப்பிட்ட தொகை செலுத்தி, ஒத்திவைப்பு காலத்திற்கு (1 முதல் 12 ஆண்டுகள் வரை) காத்திருக்க வேண்டும். இந்தத் திட்டத்தில் அதிகபட்ச கொள்முதல் விலை வரம்பு இல்லை, எனவே வாடிக்கையாளர்கள், அதிக கொள்முதல் விலை செலுத்தினால் அதிக ஆண்டுத்தொகையை பெறலாம்..
ஜீவன் சாந்தி திட்டத்தில், ரூ. 1 கோடி ரூபாய் திட்டத்தை நீங்கள் வாங்கினால், ஒத்திவைப்பு காலம் 12 வருடமாக இருக்கும்.. இந்த திட்டத்தில் 12 ஆண்டுகளுக்கு பிறகு, மாதாந்திர ஓய்வூதியமாக 1.06 லட்சம் ரூபாய் வழங்கப்படும். அதே நேரம் ஒத்திவைப்பு காலம் 10 ஆண்டுகள் என்றால், மாதாந்திர ஓய்வூதியம் ரூ.94,840 ஆக இருக்கும்.. 50 லட்ச ரூபாய் திட்டத்தை வாங்கினால், ஒத்திவைப்பு காலம் 12 வருடமாக இருக்கும் போது மாத ஓய்வூதியமாக 53,460 ரூபாய் வழங்கப்படும். ஒத்திவைப்பு காலம் 10 ஆண்டுகள் என்றால், மாதாந்திர ஓய்வூதியம் ரூ.47,420 ஆக இருக்கும்..
இந்த திட்டத்தில் முதலீடு செய்தால் நிச்சயம் ஒவ்வொரு மாதமும் வருவாயை பெறலாம்.. வாழ்நாள் முழுவதும் வருவாய் கிடைக்கும்.. ஒருவேளை இந்த பாலிசியை எடுத்த நபர் இடையில் இறந்துவிட்டாலும், அவரின் நாமினிக்கு அந்த வருவாய் கிடைக்கும்.. மேலும் இந்த திட்டத்தில் 80சி மற்றும் 80டி பிரிவுகளின் கீழ் வருமான வரி விலக்கும் உண்டு.. இந்த திட்டத்தை ஆஃப்லைனிலும் அல்லது ஆன்லைனிலும் எடுத்துக்கொள்ள முடியும்.. முன்கூட்டியே ஓய்வு பெற விரும்புபவர்களுக்கும் இந்த திட்டத்தின் நன்மைகள் கிடைக்கும். ஒரே ஒரு பிரீமியம் மூலம், பாலிசிதாரர்கள் தங்கள் நோக்கங்களை அடைய முடியும்.