ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சைக்கான சேவைகளும் வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
எலும்பு மஜ்ஜை சார்ந்த பாதிப்புகளும், நோய்களும் ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக குழந்தைகள் அதிக அளவில் இந்த நோய்க்கு ஆளாகின்றனர். எலும்பு மஜ்ஜை என்பது, உடலில் உள்ள 206 எலும்புகளுக்கு உள்ளேயும் மஜ்ஜை இருக்கிறது.அதிலிருந்துதான், ரத்த அணுக்கள் உருவாகின்றன.ஸ்டெம் செல்கள் அங்கிருந்து உருவாகி அதிலிருந்து ரத்த சிவப்பு அணுக்கள் வெள்ளையணுக்கள் தட்டணுக்களாக பிரிகின்றன. சிவப்பணுக்கள் உடலில் ஆக்சிஜனை கடத்துகின்றன. வெள்ளையணுக்கள் நோய் எதிர்ப்பாற்றலாக செயல்படும் தட்டணுக்கள் உடலில் இருந்து ரத்தம் வெளியேறாமல் தடுக்க உதவுகிறது.
குறிப்பாக குழந்தைகளுக்கு எலும்பு மஜ்ஜைகளில் இருந்து ரத்த அணுக்கள் உருவாகும் குறிப்பிட்ட வயதுக்கு பிறகு அவை தடைபட்டு முக்கிய மஜ்ஜைகளில் இருந்து மட்டும் அணுக்கள் உற்பத்தி செய்யப்படும். எலும்பு மஜ்ஜை நோய்களான புற்றுநோய் பாதிப்புகள்தான் அதிகம். நிணநீர் புற்றுநோய், எலும்பு மஜ்ஜை திசு புற்றுநோய், குருதிசார் புற்றுநோய்கள் ஏற்படும். இந்தநிலையில், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சையும் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின், `ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டம்’ இந்தியாவில் அதிகாரபூர்வமாகத் தொடங்குகிறது. தமிழக அரசும் இந்தத் திட்டத்தை ஏற்றுக்கொண்டிருக்கிறது. இந்தியா முழுவதுமுள்ள 10.74 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு தலா 5 லட்சம் ரூபாய் வரையிலான மருத்துவச் செலவை இந்தப் புதிய காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் பெறமுடியும். எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை என்பது புற்றுநோய் நோயாளிகளுக்கு மருத்துவ ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட செயல்முறையாகும். இந்த நடைமுறையில், நோயாளியின் உடலில் போதுமான ஆரோக்கியமான இரத்த அணுக்களை உற்பத்தி செய்ய முடியாத எலும்பு மஜ்ஜையை மருத்துவர்கள் மாற்றுகிறார்கள்.
பின்னர் அவை ஆரோக்கியமான இரத்தத்தை உருவாக்கும் ஸ்டெம் செல்களை உடலுக்குள் செலுத்துகின்றன. இந்த செயல்முறை ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை என்றும் அழைக்கப்படுகிறது. எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும் பலருக்கு அதன் செலவு காரணி காரணமாக பெரும்பாலும் அதைப் பயன்படுத்துவதில்லை என்று ஆராய்ச்சி காட்டுகிறது.