fbpx

கூகுள் பே, போன் பே போன்ற செயலிகள் மூலம் கடன் பெறலாம்!… ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பு!

யுபிஐ பயனர்களின் வசதியை மேம்படுத்தும் வகையில் கூகுள் பே, போன் பே போன்ற செயலிகள் மூலம் கடன் பெறலாம் என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.

இன்றைய டிஜிட்டல் உலகில் அனைத்து பணப்பரிவரித்தனைகளும் நொடி பொழுதில் எளிதாகியுள்ளது. குறிப்பாக இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை செய்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில், யுபிஐ மூலமாக `pre-sanctioned credit line” எனப்படும் கிரெடிட் தொகையை முன்கூட்டியே பயனர்கள் பெறுவதற்கான வசதியை அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. வங்கிகள் இந்த முறையின் கீழ் கடன் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகச் செப்டம்பர் 4 அன்று ரிசர்வ் வங்கி வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயனர்களின் வங்கிக் கணக்கில் பணம் இல்லாவிட்டால், யுபிஐ மூலம் கிரெடிட் தொகையைப் பெற்று செலவு செய்யலாம். கிரெடிட் லைன் ஓப்பனில் இருக்கும் வரை கடன் வாங்கியவர் அந்தத் தொகையைத் திருப்பி செலுத்தி, மீண்டும் கடன் பெறலாம்.

உதாரணத்துக்கு, நீங்கள் ஒரு லேப்டாப் வாங்க விரும்புகிறீர்கள், ஆனால், அதற்கான பணம் உங்கள் வங்கிக் கணக்கில் இல்லை எனில், யுபிஐ pre-sanctioned credit line'-ஐ பயன்படுத்தி கிரெடிட் தொகையைப் பெறலாம். அந்தப் பணத்தில் நீங்கள் பொருள்களை வாங்கிக்கொள்ளலாம். இது குறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் கூறுகையில், ``தற்போது, யுபிஐ பரிவர்த்தனைகள் வங்கிகளில் டெபாசிட் கணக்குகளுக்கு இடையே இயக்கப்படுகின்றன. யுபிஐ பரிவர்த்தனையின் நோக்கத்தை விரிவுபடுத்தும் வகையில்pre-sanctioned credit line’ மூலம் வங்கிகள் கிரெடிட் தொகை வழங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Kokila

Next Post

பாரத் என்று பெயர் மாற்றப்படுவது உறுதி!… அதை விரும்பாதவர்கள் நாட்டை விட்டு வெளியேறலாம்!…பாஜக எம்.பி. சர்ச்சை பேச்சு!

Mon Sep 11 , 2023
இந்தியாவின் பெயர் பாரத் என்று மாற்றப்படுவது உறுதி. அதை விரும்பாதவர்கள் தாராளமாக நாட்டை விட்டு வெளியேறலாம் என்று மேற்குவங்க பாஜக எம்.பி. திலீப் கோஷ் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் கரக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மேதினிப்பூர் தொகுதி பா.ஜ எம்.பி. திலீப் கோஷ், நாங்கள் மேற்கு வங்கத்தில் ஆட்சிக்கு வந்தால் கொல்கத்தாவில் உள்ள எல்லா வெளிநாட்டவர் சிலைகளையும் அகற்றுவோம் என்று பேசியுள்ளார். மேலும், பா.ஜவின் மற்றொரு […]

You May Like