fbpx

நீங்கள் எடுத்த ரயில் டிக்கெட்டுக்கான கட்டணத்தை மீண்டும் பெற்றுக் கொள்ளலாம்..!! எப்படி தெரியுமா..?

ரயிலை தவறவிடுவது சில சமயங்களில் எதிர்பாராமல் நடப்பது தான். ரயில் தாமதமாக வரும் என்று நினைத்து பொறுமையாக ரயில் நிலையத்திற்கு வருவது, சில நேரங்களில் யாராவது நெரிசலில் சிக்கி ஏறமுடியாமல் ரயிலை தவறவிடுவது போன்ற சம்பவங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. நாட்டில் தினமும் ஏராளமான பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்த ரயிலில் ஏறுவதில்லை. இப்படி தவறவிட்ட ரயிலின் டிக்கெட் பணம் திரும்ப கிடைக்குமா? என்ற கேள்வி பலரிடம் இருக்கும். அதற்கான விடையை நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம்.

ஒருவேளை நீங்கள் ரயிலைத் தவறவிட்டால். ரயில் டிக்கெட்டுக்கு நீங்கள் செலுத்திய பணத்தை நிச்சயம் திரும்பப் பெறலாம். ரயில்வே டிக்கெட்டைத் திரும்பப்பெறும் விதிகளின்படி, நீங்கள் பயணிக்க வேண்டிய ரயிலைப் பிடிக்க முடியாமலும், பயணிக்க முடியாமலும் இருந்தால், டிக்கெட்டை தொகையைத் திரும்பப் பெற முடியும். அதற்கு பணத்தைத் திரும்பப் பெற நீங்கள் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

பணத்தைத் திரும்பப் பெற TDRஐப் பதிவு செய்ய வேண்டும். நீங்க தவறவிட்ட ரயில்வே ஸ்டேஷனில் இருந்து புறப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் நீங்கள் TDR ஐ பதிவு செய்யலாம். பயணிகளுக்கு ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் TDR பதிவு செய்யும் வசதியை ரயில்வே வழங்கியுள்ளது. இருப்பினும் பணத்தைத் திரும்பப்பெறும் செயல்முறையை முடிக்க 60 நாட்கள் வரை ஆகலாம். நேரில் ஸ்டேஷனில் TDR வாங்கி பூர்த்தி செய்தால், பூர்த்தி செய்த படிவத்தை GGM (IT), Indian Railway Catering and Tourism Corporation Limited, 1st Floor, Internet Ticket Centre, IRCA Building, State Entry Road, New Delhi 110055 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

ஆன்லைனில் பதிவு செய்தால் உங்கள் IRCTC கணக்கில் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட் வரலாற்றில் TDR தாக்கல் செய்யப்பட வேண்டிய PNR-ஐ தேர்ந்தெடுத்து, அதன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். TDR பணத்தைத் திரும்பப் பெற டிக்கெட் விவரங்களில் பயணிகளின் பெயரைத் தேர்ந்தெடுக்கவும். பட்டியலில் இருந்து TDR ஐ தாக்கல் செய்வதற்கான காரணத்தைத் தேர்ந்தெடுத்து சமர்ப்பித்தால் போதும். அனைத்து விவரங்களும் சரியாக இருந்தால், பரிசீலித்த பின்னர் உங்கள் பதிவு செய்யப்பட்ட வங்கிக் கணக்கிற்கு உங்கள் டிக்கெட் தொகை திருப்பி அனுப்பப்படும்.

Chella

Next Post

இன்று 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை..!! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

Wed May 31 , 2023
தமிழ்நாட்டில் இன்று 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, […]

You May Like