ஒவ்வொரு முதலீட்டாளரும் தங்கள் முதலீட்டை முற்றிலும் பாதுகாப்பானதாகவும், அதிகபட்ச வருமானம் பெறவும் விரும்புகிறார்கள். முதலீட்டிற்கு ஏற்ற பல திட்டங்கள் சந்தையில் உள்ளன. அந்த வகையில் முதலீட்டிற்கு ஏற்ற தபால் அலுவலக திட்டம் குறித்து தற்போது பார்க்கலாம்..

இந்த திட்டத்திற்கு தபால் அலுவலக நேர வைப்பு கணக்கு திட்டம் ( post office time deposit account scheme) என்று பெயரிடப்பட்டுள்ளது. ஒரு முதலீட்டாளருக்கு வெறும் 3 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கிடைக்கும். அதற்கு நீங்கள் தபால் அலுவலகத்தில் நேர வைப்பு கணக்கை திறக்க வேண்டும். இந்தக் கணக்கில் மொத்தமாக 8 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். இத்திட்டத்தின் கீழ், தபால் அலுவலகம் ஆண்டுக்கு 5.5 சதவீத வட்டியை வழங்குகிறது. அதன்படி, 3 ஆண்டுகளுக்குப் பிறகுதான், முதிர்வு காலத்தில் ரூ.10 லட்சத்துக்கும் மேல் வருமானம் கிடைக்கும். வெறும் 3 ஆண்டுகளில் ஒரு லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.
கணக்கு திறப்பது எப்படி? நீங்கள் முதலில் அருகில் உள்ள தபால் அலுவலகத்தில் நேர வைப்பு கணக்கு அல்லது நிலையான வைப்பு கணக்கு தொடங்க வேண்டும். உங்கள் முதலீட்டுத் தொகை ரூ 1000 முதல் நீங்கள் முதலீடு செய்ய விரும்பும் தொகை வரை இருக்கும். குறைந்தபட்ச வயது வரம்பு 10 ஆண்டுகள். நமைனர் குழந்தையின் கணக்கு அவரது பெற்றோரின் மேற்பார்வையின் கீழ் திறக்கப்படுகிறது.
திட்டத்தின் முதிர்வு காலம் 1 வருடம், 2 ஆண்டுகள், 3 ஆண்டுகள் மற்றும் 5 ஆண்டுகள் ஆகும். அதாவது 1, 2, 3, அல்லது 5 ஆண்டுகளுக்கு இதில் முதலீடு செய்யலாம். இந்தத் திட்டம் முதலீட்டாளர்கள் சில கட்டுப்பாடுகளுடன் முதிர்வு காலத்திற்கு முன்பே பணத்தை எடுக்க அனுமதிக்கிறது. முதலீடு செய்த 6 மாதங்களுக்குள் திரும்பப் பெற உங்களுக்கு அனுமதி கிடைக்காது. அதே நேரத்தில், 6 முதல் 12 மாதங்களுக்கு இடைப்பட்ட தொகையை திரும்பப் பெறும்போது, சேமிப்புக் கணக்கிற்கு இணையான வட்டியைப் பெறுவீர்கள். மறுபுறம், நீங்கள் 2, 3 அல்லது 5 ஆண்டுகளுக்கு முன்பு கணக்கிலிருந்து பணத்தை எடுத்தால், உங்கள் மொத்த வட்டியில் இருந்து 2 சதவீதம் தொகை கழிக்கப்படும்.