உலகம் என்ன தான் நாகரீகம் தொழில்நுட்பங்கள் என வளர்ந்து பல முன்னேற்றங்களை கண்டாலும் சில மக்கள் தங்களது இனம் மற்றும் கலாச்சாரம் என உலகின் பார்வையில் இருந்து ஒதுங்கியே வாழ்ந்து வருகின்றனர். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு பழங்குடி இன மக்கள். இவர்கள் தாங்கள் புது சமூகத்துடன் கலந்தால் தங்களது கலாச்சாரம், இனம் மற்றும் நிலத்திற்கு ஆபத்து வரும் எனக் கருதி தங்களை பொதுச் சமூகத்தில் இருந்து ஒதுக்கி தங்களது பழங்குடியின சமூக குழுக்கள் உடனே பல நூற்றாண்டுகளாக தங்களது மரபு மாறாமல் வாழ்ந்து வருகின்றனர்.
அந்த வகையில், சட்டிஸ்கர் மாநிலத்தில் வாழும் முரியா பழங்குடியின மக்கள் மத்தியில் வினோதமான பழக்கம் பின்பற்றப்பட்டு வருகிறது. அது என்னவென்றால், அந்த மக்கள் கோட்டுல் என்ற ஒரு இடத்தை அமைத்துள்ளனர். அங்கு திருமணமானகாத அல்லது திருமணம் நிச்சயம் ஆகாத ஆண் மற்றும் பெண்கள் மட்டுமே செல்ல அனுமதி, அங்கு செல்லும் ஆண் அல்லது பெண் தனக்கு விருப்பமான நபர்களுடன் உடலுறவு வைத்துக்கொள்ளலாம். யார் யாருடன் உடலுறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எந்த ஒரு தடையும் கிடையாது.
அந்த சமூகத்தில் பிறந்து 10 வயதை கடந்த யார் வேண்டுமானாலும் கோட்டூலுக்கு செல்லலாம். இந்த இன மக்கள் சட்டீஸ்கரில் மட்டுமல்ல, மகாராஸ்டிரா, ஆந்திரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சில பகுதிகளிலும் வாழ்கிறார்கள் அங்கும் இந்த பழக்கம் இருக்கிறது. குறிப்பாக கோண்ட் இன மக்களை விட இந்த நடைமுறையை இன்றும் பழக்கத்தை வைத்திருப்பது முரியா இன மக்கள் தான்.
கோட்டூல் என்பது ஒரே இடத்தில் ஒருவருக்கொருவர் உடலுறவு கொள்ளும் இடம் கிடையாது. அங்கு தேர்வு செய்யும் நபர்கள் ஜோடியாக மட்டுமே தங்க வேண்டும் அவர்கள் தனிமையில் இருப்பதை வெளியில் உள்ளவர்கள் பார்க்க முடியாது. அதே போல அந்த கோட்டூலுக்கு என்று ஒரு விதிமுறை உள்ளது. அங்கு ஒரு லீடர் இருப்பார் அவர் தான் அந்த ஒட்டு மொத்த கோட்டூலுக்குமே பொறுப்பு, கோட்டூல் என்பது ஒரு செக்ஸ் பள்ளியாகவே இயங்கும் அங்கு உடலுறவு கொள்வது மட்டுமே வேலையில்லை. அங்கு சுத்தமாக இருப்பது எப்படி? மற்றவருடன் நாம் இடங்களை பகிர்ந்து கொள்வது எப்படி? ஒழுக்கம் என்பது என்ன? பொது நல சேவை என்பது என்ன உள்ளிட்ட விஷயங்கள் கற்று தரப்படும்.
Read more:எக்ஸ் சைபர் தாக்குதல்.. உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக எலான் மஸ்க் குற்றசாட்டு..!!