fbpx

தினமும் ரூ.100 முதலீடு செய்து 15 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் பெறலாம்.. எந்த திட்டத்தில் தெரியுமா..?

ரிஸ்க் இல்லாத, சிறந்த வருமானத்தைப் பெறக்கூடிய வருங்கால வைப்பு நிதி திட்டங்களில் முதலீடு செய்வதையே பலரும் விரும்புகின்றனர்.. அந்த வகையில் பாதுகாப்பான முதலீட்டு திட்டங்களில் ஒன்று தான் PPF அதாவது, பொது வருங்கால வைப்பு நிதி.. பூஜ்ஜிய சந்தை ஆபத்து மற்றும் மூன்று வரி சலுகைகள் கொண்ட பாதுகாப்பான முதலீட்டு வழிகளில் ஒன்றாகும். PPF திட்டத்தில் முதலீடு செய்யப்படும் அசல் தொகை, சம்பாதித்த வட்டி மற்றும் முதிர்வுத் தொகை அனைத்தும் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

இருப்பினும், ஒருவர் 15 ஆண்டுகளுக்கு PPF இல் ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரை மட்டுமே முதலீடு செய்ய முடியும். இந்த கருவியின் கீழ் ஆண்டுக்கு ரூ.1.5 லட்சத்திற்கு மேல் முதலீடு செய்ய அனுமதி இல்லை. அதன்படி, ஒரு நபர் PPF திட்டத்தில் 15 ஆண்டுகளுக்கு ஒரு நாளைக்கு ரூ 100 அல்லது மாதம் ரூ 3000 முதலீடு செய்ய திட்டமிட்டால், அவர் தற்போதைய 7.1 சதவீத வட்டி விகிதத்தில் ரூ 9,76,370 பெறுவார். முதலீட்டுத் தொகையில் சிறிது அதிகரிப்பு, முதிர்வுத் தொகையை ரூ.10 லட்சத்துக்கும் அதிகமாக உயர்த்தலாம். ஒரு நபர் 15 ஆண்டுகளுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.3080 முதலீடு செய்து 7.1% வீதத்தில் ரூ.10,02,407 பெறலாம்..

இருப்பினும், PPF வட்டி விகிதம் மாற்றத்திற்கு உட்பட்டது மற்றும் நிதி அமைச்சகத்தின் காலாண்டு அறிவிப்புகளின் அடிப்படையில் வட்டி மாறுபடலாம் என்பதை எப்போதும் கவனத்தில் கொள்ள வேண்டும். கூடுதலாக, முதலீட்டுத் தொகையின் வட்டியானது, அந்த மாத இறுதி வரை ஐந்தாவது நாள் முடிவடையும் வரை கணக்கில் இருந்த மிகக் குறைந்த தொகையைப் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

Maha

Next Post

இன்று முதல் 3 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்.. வானிலை மையம் எச்சரிக்கை...

Wed Sep 21 , 2022
தமிழகத்தில் வரும் 25-ம் தேதி வரை மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று முதல் 23-ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள், தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல்‌ மிதமான […]

You May Like