fbpx

School | ‘இனி இந்த வயதிலும் ஆசிரியர் பணியில் சேரலாம்’..!! தமிழ்நாடு அரசு அதிரடி..!!

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் இனி 58 வயது வரை ஆசிரியர் பணியில் சேரலாம் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், ஆசிரியர் பணியில் சேர்வதற்கான வயது உச்சவரம்பு பொதுப்பிரிவினருக்கு 53 ஆகவும், இதர பிரிவினருக்கு 58 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த வயது தளர்வு குறித்து சிறுபான்மையினர் ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் முக.ஸ்டாலின் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த அரசாணையில், பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசுப் பள்ளிகளில் அனைத்து வகையான ஆசிரியர்கள் நேரடி நியமனம் தொடர்பான சிறப்பு விதிகளில் நேரடி நியமன பணிநாடுநர்களுக்கான உச்ச வயது வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. ஜனவரி 9ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் ஆய்வு மேற்கொண்டு பள்ளிக் கல்வித்துறையின் கீழ் உள்ள அரசுப் பள்ளிகளில் அனைத்து வகையான ஆசிரியர்கள் நேரடி நியமனத்திற்கான வயது உச்ச வரம்பு மாற்றியமைக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : Rain Notification: தமிழகத்தில் இன்று மற்றும் நாளை மிதமான மழைக்கு வாய்ப்பு…! வானிலை மையம் தகவல்

Chella

Next Post

Modi: பாரத் டெக்ஸ் 2024!... இந்தியாவின் மிகப்பெரிய ஜவுளி கண்காட்சி!… பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

Mon Feb 26 , 2024
Modi: டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்றுகாலை 10:30 மணிக்கு நாட்டின் மிகப்பெரிய உலகளாவிய ஜவுளி நிகழ்வுகளில் ஒன்றான பாரத் டெக்ஸ் 2024 கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். பாரத் டெக்ஸ் 2024 கண்காட்சி இன்றுமுதல் பிப். 29 வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமரின் 5எஃப் தொலைநோக்குப் பார்வையைக் குறிக்கும் வகையில் ஃபைபர், ஃபேப்ரிக் ,ஃபேஷன் ,ஃபோகஸ் ஆகியவற்றின் மூலம் ஒட்டுமொத்த ஜவுளி மதிப்பு சங்கிலியையும் உள்ளடக்கிய […]

You May Like