fbpx

இந்த பழங்களை சாப்பிட்டே உங்கள் உடல் எடையையும், தொப்பையையும் குறைக்கலாம்..!! நோட் பண்ணிக்கோங்க..!!

பலர் உடல் எடையைக் குறைக்க குறைவான உணவை உண்கிறார்கள். அல்லது பசியுடன் இருப்பதன் மூலம் விரைவாக உடல் எடையைக் குறைக்க முயற்சிக்கிறார்கள். இந்த வழியில் நீங்கள் உங்கள் எடையை குறைக்கலாம். ஆனால், குறைவாக சாப்பிடுவது அல்லது பசியுடன் இருப்பது உங்கள் ஆரோக்கியத்தை கெடுக்கும். சரியான உணவுமுறையை எடுத்துக் கொள்ளாததால், உங்கள் உடலுக்கு ஊட்டச்சத்துக்கள் கிடைக்காது. அதனால் உங்கள் உடல் பலவீனமடையும். எனவே, உங்கள் எடையை குறைக்க விரும்பினால், முக்கியமாக தொப்பையை குறைக்க விரும்பினால், உங்கள் உணவில் சில பழங்களை சேர்த்துக்கொள்ளலாம்.

ஆப்பிள்: தொப்பையை குறைக்க ஆப்பிள் பழம் உதவும் என்று உங்களுக்கு தெரியுமா? ஏனென்றால், ஆப்பிளில் நிறைய நார்ச்சத்து உள்ளது. இது உங்கள் செரிமான அமைப்பை நன்றாக வைத்திருக்க உதவும். மேலும், உடல் எடையைக் குறைக்கவும் உதவும். தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிட்டு வந்தால் பல நோய்களில் இருந்தும் விலகி இருக்கலாம்.

வாழைப்பழம்: இதில் கோலைன் இருக்கிறது. அதோடு இதில் இருக்கும் பி விட்டமின்கள் அடிவயிற்றில் சேர்ந்திருக்கக்கூடிய கொழுப்பைக் கரைத்திடும். மதுப்பழக்கம் உடையவர்களுக்கு கல்லீரலைச் சுற்றி கொழுப்பு படிந்திருக்கும் அதனை கரைக்கவும் வாழைப்பழம் உதவும்.

கிவி: உடல் எடையை குறைக்கும் உணவுகளில் ஒன்று கிவி பழம். இதில் வைட்டமின் சி, வைட்டமின் ஈ, ஃபோலேட் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. மேலும், கிவி விதைகள் செரிமானத்திற்கும் உதவுகிறது. அதே நேரத்தில், கிவியில் கரையக்கூடிய நார்ச்சத்து காணப்படுகிறது. இது உங்கள் வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்க உதவும்.

பப்பாளி: பப்பாளி சாப்பிடுவது எடை மற்றும் தொப்பையை குறைக்க உதவுகிறது. பப்பாளியில் அதிகப்படியான நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது நம் உடலுக்கு மிகவும் நன்மையை விளைவிக்கும். இது செரிமானத்தை பராமரிக்க உதவுகிறது.

Read More : நாடே எதிர்பார்ப்பு..!! ஒரே மேடையில் விவாதிக்கும் மோடி, ராகுல்..? இந்து ராம் எழுதிய கடிதத்தின் பின்னணி..!!

Chella

Next Post

IDIOT சிண்ட்ரோம் என்றால் என்ன?… ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் எதிர்மறை தாக்கங்கள் என்ன?

Wed May 15 , 2024
Idiot Syndrome: இன்றைய காலகட்டத்தில் இணையம் ஒரு வரப்பிரசாதம், ஒரு சில தேடல்களில் எல்லாம் நமக்குக் கிடைக்கும் அனைத்து வகையான தகவல்களையும் அணுக முடியும். இது உண்மையில் பல வழிகளில் உதவியாக இருந்தாலும், சுகாதாரப் பாதுகாப்புக்கு வரும்போது பாதகமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. மக்கள், இப்போதெல்லாம், தங்கள் உடல்நலம் தொடர்பான பதில்களைக் கண்டறிய இணையத்தின் உதவியை நாடுகின்றனர். சுய மற்றும் தவறான நோயறிதலுக்கு இரையாகிறார்கள். இதுதான் IDIOT Syndrome. மருத்துவ மொழியில் […]

You May Like