ஒரே ஸ்மார்ட்போனில் எப்படி 2 வாட்ஸ்அப் கணக்குகளை பயன்படுத்துவது என்று பார்க்கலாம்..
உலகளவில் அதிக பயனர்களை கொண்ட வாட்ஸ்அப் நிறுவனம் முன்னணி மெசேஜிங் ஆப்-ஆக உள்ளது.. இந்தியாவில் கோடிக்கணக்கான பயனர்களை வாட்ஸ்அப் நிறுவனம் கொண்டுள்ளது.. பலரும் தங்கள் வணிகத்திற்கு என்று தனியாக ஒரு வாட்ஸ் அப் கணக்கையும், தனிப்பட்ட பெர்சனல் வாட்ஸ் கணக்கையும் பயன்படுத்தி வருகின்றனர்.. ஆனால் தற்போது, ஒரே சாதனத்தில் இரண்டு வாட்ஸ்அப் கணக்குகளைப் பயன்படுத்த முடியும்.. ஆம்.. இனி உங்கள் வணிகம் மற்றும் தனிப்பட்ட கணக்குகளை இரண்டு தனித்தனி சாதனங்களில் வைத்திருக்க வேண்டியதில்லை.. Dual Apps என்ற அம்சத்தை பயன்படுத்தி, இரண்டு வாட்ஸ் அப் கணக்குகளைப் பயன்படுத்தலாம்.
இரட்டை பயன்பாடுகளை நீங்கள் எவ்வாறு பயன்படுத்தலாம்..?
- உங்கள் Android சாதனத்தில் உள்ள ‘Settings’ என்பதற்குச் செல்லவும்
- கீழே ஸ்க்ரோல் செய்து Apps என்பதைத் தட்டவும்
- ”Dual Apps’ என்பதைத் தேர்ந்தெடுத்து, ‘Create’ என்பதைக் கிளிக் செய்யவும்
- இந்த அம்சத்தால் ஆதரிக்கப்படும் பயன்பாடுகளில், ‘WhatsApp’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்
- Dual Apps icon ஐகானைப் பயன்படுத்தி WhatsApp ஐத் திறக்கவும்
- மற்றொரு தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி உங்கள் வாட்ஸ்அப் கணக்கை அமைக்கவும்
- தேர்ந்தெடுக்கப்பட்ட சாதனங்களில் மட்டுமே கிடைக்கும்
இரட்டை சிம் அம்சத்தை ஆதரிக்கும் Oppo, Xiaomi, Vivo, Huawei, Samsung, OnePlus மற்றும் Realme ஆகியவற்றின் ஸ்மார்ட்போன்களில் இந்த விருப்பம் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அம்சத்தை இயக்குவதற்கான படிகள் அந்தந்த பிராண்டுகளைப் பொறுத்து மாறுபடலாம்; மேற்கூறிய படிகள் Xiaomi வகை போனுக்கானது… கூடுதலாக, இந்த அம்சம் வெவ்வேறு தயாரிப்பாளர்களுக்கு வெவ்வேறு பெயரைக் கொண்டுள்ளது. உதாரணமாக, Oppo இல், இது ”App Clone” என்றும், சாம்சங்கில், அதன் பெயர் ‘Dual Messenger’ என்றும் அழைக்கப்படுகிறது. பயனர்கள் தங்கள் இரண்டாவது எண் செயலில் உள்ளதா என்பதையும் இணைய இணைப்பிற்கு பயன்படுத்தலாம் என்பதையும் உறுதிசெய்ய வேண்டும்.