fbpx

வாக்காளர் அடையாள அட்டை இல்லை என்றாலும் வாக்களிக்க முடியும்…! இந்த ஆவணங்கள் இருந்தால் போதும்…!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் -19ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை இல்லையென்றாலும் பான் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்ட 12 ஆவணங்களில் ஏதேனும் ஒரு ஆவணத்தைக் கொண்டு நீங்கள் வாக்களிக்கலாம்.

வாக்களிப்பதன் அவசியம் என்ன? குடிமக்கள் அனைவருக்கும் வாக்களிப்பது மிகப்பெரிய கடமை ஆகும்.குடிமக்கள் தங்கள் அரசியல் அதிகாரத்தை வாக்குரிமை மூலம் செலுத்துகின்றனர். இந்த உரிமையைப் பயன்படுத்தித் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு அதிகாரம் அளிக்கின்றனர். எனவே, மக்களாட்சி நடைபெறும் நாட்டில் வாக்குரிமை மிக இன்றியமையாத ஒன்றாகும். வாக்காளர் அடையாள அட்டை உங்களிடம் இல்லாவிட்டாலும் கீழ்கண்ட 12 ஆவணங்கள் இருந்தால் வாக்களிக்கலாம் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

என்னென்ன ஆவணங்கள்:
1)ஆதார் அட்டை
2)பான் கார்டு
3)ஓட்டுநர் உரிமம்
4) மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அடையாள அட்டை
5)வங்கி/அஞ்சலக கணக்கு புத்தகங்கள்
6) மருத்துவ காப்பீட்டு அட்டை
7)தேசிய மக்கள் தொகை பதிவேட்டின்கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை
8)நாடாளுமன்ற, சட்டமன்ற, சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை
9)புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்
10)சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டை
11)மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், வரையறுக்கப்பட்ட பொதுநிறுவனங்களில் வழங்கிய புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டை
12)பொதுநிறுவனங்களில் வழங்கிய புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டை
போன்ற ஆவணங்களில் ஏதேனும் ஒன்று இருந்தால் போது உங்களுடைய வாக்குகளை பதிவு செய்யலாம்.

Maha

Next Post

தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகள்!… சுவாச நோயாளிகளிடையே மரணத்தை ஏற்படுத்தும்!… ஆய்வில் அதிர்ச்சி!

Sun Apr 14 , 2024
Processed Foods: நமது அன்றாட உணவில் மிக பதப்படுத்தப்பட்ட உணவுகளின் அளவு அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆனால் இவை உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். நீண்ட தூரம் பயணம் செய்கிறீர்கள் என்றால், பயணத்தின் நடுவில் கண்டிப்பாக ஏதாவது சாப்பிட தோன்றும். சில நேரம் பசிக்கிறது என்பதற்காக சாப்பிடலாம். சில நேரம் பொழுது போக வேண்டும் என்பதற்காகவும் சாப்பிடலாம். அப்போது, நாம் காய்கறி, சாதம் அல்லது சப்பாத்தி போன்றவற்றை சாப்பிட விரும்பமாட்டோம். […]

You May Like