பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு, தனது சுதந்திர தின உரையில் பிரதான் மந்திரி ஜன்-தன் யோஜனா திட்டத்தை அறிவித்தார். மக்கள் வசதியான முறையில் வங்கி, பணம் அனுப்புதல், கடன், காப்பீடு, ஓய்வூதியம் மற்றும் பிற நிதிச் சேவைகளை அணுகுவதை உறுதி செய்ய கடந்த 2014, ஆகஸ்ட் 28,-ம் தேதி, நாடு முழுவதும் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.
உங்களிடம் பிரதான் மந்திரி ஜன்-தன் யோஜனா (PMJDY) கணக்கு இருந்தால், அதில் உள்ள பல்வேறு நிதிப்பலன்கள் குறித்து பார்க்கலாம்.. குறிப்பாக ஜன்தன் கணக்கில் பேலன்ஸ் இல்லாமல் ரூ. 10000 பணத்தை எடுப்பது உள்ளிட்ட பல நன்மைகள் இதில் உள்ளன.. இதுகுறித்து பார்க்கலாம்..
ஜன்தன் கணக்கு வைத்திருப்பவர்கள் தற்போது 10,000 ரூபாய் வரை ஓவர் டிராஃப்ட் (OD) வசதியைப் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, ஓவர் டிராஃப்ட் வரம்பு ரூ.5,000 ஆக இருந்தது. பின்னர் ரூ.10,000 ஆக இரு மடங்காக உயர்த்தப்பட்டது. 2,000 வரையிலான ஓவர் டிராஃப்ட் நிபந்தனைகள் இல்லாமல் கிடைக்கும். ஓவர் டிராஃப்ட் வசதியைப் பெற, உங்கள் ஜன்தன் கணக்கு குறைந்தது 6 மாதங்கள் பழமையானதாக இருக்க வேண்டும், இல்லையெனில் நீங்கள் ரூ.2,000 வரை மட்டுமே ஓவர் டிராஃப்டைப் பெற முடியும். மேலும் ஓவர் டிராப்டுக்கான வயது வரம்பு 60லிருந்து 65 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
PMJDY கணக்குகள் நேரடி பலன் பரிமாற்றம் (DBT), பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY), பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (PMSBY), அடல் பென்ஷன் யோஜனா (APY), போன்ற பல நிதி நன்மைகளுக்கும் தகுதியுடையவை என்பது குறிப்பிடத்தக்கது..