fbpx

”நீங்கள் எதையும் இலவசமாக செய்யவில்லையே”..!! ”உங்கள் கணவர் செய்தது மட்டும் சரியா”..? எகிறிய இயக்குநர்..!!

தலைப்பு விவகாரத்தில் விக்னேஷ் சிவன் செய்தது மட்டும் நியாயமா? என இயக்குநர் எஸ்.எஸ். குமரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “3 வினாடிக் காட்சிக்காக நஷ்ட ஈடு கேட்டு தனுஷ் உங்கள் மீது வழக்கு தொடர்ந்ததாய் வெகுண்டு எழுந்த நீங்கள், கடந்தாண்டு எல்ஐசி என்ற எண் தலைப்பை உங்கள் கணவர் விக்னேஷ் சிவன் என்னுடைய அனுமதியின்றி பயன்படுத்தியதை அறிந்திருப்பீர்கள். எல்ஐசி என்ற தலைப்பு என் நிறுவனத்தின் பெயரில் இருப்பதை அறிந்த விக்னேஷ் சிவன், தன் மேலாளர் மூலம் என்னிடம் கேட்டு வழங்காத நிலையிலும், அதே தலைப்பை அவர் படத்திற்கு வைத்து விளம்பரப்படுத்தியது எந்த விதத்தில் நியாயம்..?

என் கதைக்கும் அந்த தலைப்பிற்கும் பிரிக்க முடியாத ஒற்றுமை இருக்கிறது. எல்ஐசி என்ற தலைப்பை வழங்க முடியாத சூழல் இருக்கிறது என்று நேர்மையான முறையில் பதிலளித்தும் அதிகாரத்தன்மையுடன் அதே தலைப்பை தன் படத்திற்கு விக்னேஷ் சிவன் வைக்கிறார் என்றால் ‘உன்னால் என்ன பண்ண முடியும்?’ என்ற அதிகார நிலை தானே காரணமாக இருக்க முடியும். அதற்கு எந்த கடவுள் மன்றத்தில் விக்னேஷ் சிவனை பதில் சொல்ல சொல்வீர்கள்..?

உங்களை விட பலம் பொருந்தியவர்கள் என்றால் 2 வருடம் பொறுமையோடு பயன்படுத்த அனுமதி கேட்கும் நீங்கள், என்னிடம் எதேச்சிகாரத்துடன் நடந்து கொண்டு என்னை மன உளைச்சல் ஆக்கியதற்காக நிச்சயம் கடவுள் மன்றத்தில் பதில் சொல்ல நேரிடும். இப்போது வரை அந்தத் தலைப்பினால் ஏற்பட்ட மன உளைச்சல் என்னை பாதித்துக் கொண்டிருக்கிறது. என் படத்தையும் அது பாதிப்படைய செய்துள்ளது.

நீங்கள் இங்கு எதையும் இலவசமாக செய்யவில்லை. எங்கள் படைப்புகளை மட்டும் இலவசமாக பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பது மூலம் படைப்புலகத்திற்கு மிக மோசமான வழிகாட்டியாக நீங்களும் உங்கள் கணவரும் இனம் காட்டப்படுவீர்கள் என்பதை நினைவில் கொள்க” என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Read More : அதிக வட்டி.. அதிக வருமானம்..!! இந்த 5 திட்டங்களை மறந்துறாதீங்க..!! பாதுகாப்பானதும் கூட..!!

English Summary

Is what Vignesh Shivan did in the title issue just right? Director S.S. Kumaran raised the question.

Chella

Next Post

சட்டக்கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான வயது வரம்பு 59 ஆக உயர்த்த வேண்டும்...!

Sat Nov 16 , 2024
The age limit for the post of Assistant Professor in Law College should be increased to 59.

You May Like