fbpx

சாதிக்க வயது தடையில்லை..!! 58 வயதில் 3 டிகிரி வாங்கிய முத்துக்காளை..!! ரசிகர்கள் வாழ்த்து..!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பிறந்த முத்துக்காளை, கராத்தேவில் பிளாக் பெல்ட் பெற்றவர். சினிமாவில் சண்டைப் பயிற்சியாளராக வேண்டும் என்ற ஆசையில் தனது 18-வது வயதில் சென்னைக்கு புறப்பட்டு வந்தார். சினிமாவில் சண்டைப் பயிற்சியாளராக சில காலம் பணியாற்றிய அவர், 1997இல் பொன்மனம் படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்தார். பிறகு என் உயிர் நீதானே, நிலவே முகம் காட்டு போன்ற படங்களில் நடித்தார்.

இப்படி சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டு இருந்தவரை, வடிவேலுவுடன் ஏற்பட்ட நட்பு பிரபல நகைச்சுவை நடிகராக்கியது. வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் நடித்து இவர் பிரபலமானார். செத்து செத்து விளையாடலாம் என்ற இவரது காமெடி மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனது. ஆனால், அரசியல் மேடையில் பேசியதால், வடிவேலுக்கு மார்க்கெட் குறைந்ததைத் தொடர்ந்து முத்துக்காளைக்கும் பட வாய்ப்பு இல்லாமல் போனது.

இந்நிலையில் படவாய்ப்பு இல்லாத காலத்தில் படிப்பு மீதான தனது ஆர்வத்தை பூர்த்தி செய்திருக்கிறார் முத்துக்காளை. படிப்பில் கவனத்தைத் திருப்பிய இவர், 2017இல் தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. வரலாறு பாடத்தில் இரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார். பிறகு 2019இல் எம்.ஏ. தமிழ் படித்து அதிலும் முதல் வகுப்பில் தேச்சி பெற்றுள்ளார். தற்போது 58 வயதான முத்துக்காளை அண்மையில் வெளிவந்த பி.லிட் என்ற தமிழ் இலக்கியம் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிறு வயதில் இருந்தே பட்டதாரி ஆக வேண்டும் என்ற ஆசை கொண்ட இவர், தனது கனவை 50 வயதுக்கு பிறகு நிறைவேற்றியிருக்கிறார். சாதிக்க வயது ஒரு தடை இல்லை என்பதை முத்துக்காளை நிரூபித்துள்ளார். இவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Chella

Next Post

ராதிகாவை கட்டாயப்படுத்தி..!! இறுதியில் கல்லூரி மாணவியுடன்..!! நடிகர் சுதாகரின் தற்போதைய நிலை..!!

Tue Dec 26 , 2023
தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயம் என்று புகழப்படும் பாரதிராஜா, கிராமத்து கதைகளை உயிரோடு சினிமாவில் படைப்பதில் வல்லவர். இவர் அறிமுகம் செய்து வைத்த நடிகர்கள் மற்றும் நடிகைகள் இன்று உயர்ந்த அந்தஸ்தில் இருக்கின்றனர். அந்த வரிசையில் 1978ஆம் ஆண்டு கிழக்கே போகும் ரயில் என்ற திரைப்படத்தில் நடிகை ராதிகா மற்றும் நடிகர் சுதாகரை அறிமுகம் செய்து வைத்தது பாரதிராஜா தான். இந்நிலையில், தற்போது பத்திரிகையாளர் மற்றும் சினிமா விமர்சகரான பயில்வான் […]

You May Like