fbpx

”இனி லைசன்ஸ் போடுவதற்கு டிரைவிங் ஸ்கூல் போக வேண்டியதில்லை”..!! தமிழ்நாடு அரசின் புதிய திட்டம் அறிமுகம்..!!

டிரைவிங் லைசன்ஸ் செலவைக் குறைக்க போக்குவரத்துத் துறை புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தி உள்ளது.

டிரைவிங் லைசன்ஸ் பெற இரண்டு வகையான நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அதில் ஒன்று, டிரைவிங் ஸ்கூல் மூலமாக பயிற்சி பெற்று ஓட்டுனர் உரிமம் பெற விண்ணப்பித்து பெறுவது. மற்றொன்று தானாக விண்ணப்பித்து ஓட்டுநர் உரிமம் பெறுவது. டிரைவிங் ஸ்கூல் மூலமாக விண்ணப்பிப்பவர்களுக்கு அதிக அளவிலான தொகை செலவாவது வழக்கம். மேலும், தானாக ஓட்ட கற்றுக் கொண்டவர்களுக்கும் சொந்த வாகனம் இல்லாததால் உரிமை பெற பயிற்சி பள்ளியை தேடி செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இந்நிலையில், பொதுமக்களின் நலன் கருதி தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத் துறை புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளது. தானாக விண்ணப்பித்து ஓட்டுனர் உரிமம் பெற விரும்புவோர் சொந்த வாகனம் இல்லை என்றால் இனி பிரச்சனை இல்லை. இனி இதற்காக ஒவ்வொரு ஆர்டிஓ அலுவலகங்களிலும் தனி வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இதற்காக தமிழ்நாடு அரசு 62 கோடி செலவில் 145 ஓட்டுநர் உரிம தேர்வு வாகனத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது.

ஆன்லைன் வழியாக விண்ணப்பித்தவர்கள் 50 ரூபாய் கட்டணம் செலுத்தி ஓட்டுனர் உரிம தேர்வு வாகனத்தை பெற்றுக்கொண்டு ஆர்டிஓ முன்பு வாகனத்தை ஓட்டி காட்டி உரிமத்தை பெற முடியும். இதனால் பயிற்சி பள்ளிகளுக்கு அதிகம் செலவு செய்ய வேண்டும் என்ற நிலை மாற்றப்பட்டுள்ளது.

Chella

Next Post

நாளை (டிச.27) மேலும் ஒரு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை..!! ஆட்சியர் அறிவிப்பு..!!

Tue Dec 26 , 2023
நீலகிரி மாவட்டத்தில் படுகர் இன மக்களின் குலதெய்வம் ஆன ஹெத்தை அம்மன் கோவில் திருவிழாவானது நாளை (டிசம்பர் 27) கொண்டாடப்படுகிறது. இங்குள்ள 8 கிராமங்களில் உள்ளவர்கள் இந்த பண்டிகையன்று விரதம் இருந்து பாதயாத்திரை செல்வார்கள். இத்தனை சிறப்பு மிக்க இந்த விழாவானது வரும் டிசம்பர் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதன் காரணமாக மாவட்டத்திற்கு நாளை (டிசம்பர் 27) உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் அங்குள்ள […]

You May Like