அமலாக்கத்துறை அறிக்கையில் சொன்ன ரூ.1,000 டாஸ்மாக் ஊழல் பின்னணியில் உள்ள அந்த தியாகி யார்..? என்ற கேள்வியை பேட்ஜாக அணிந்து சட்டப்பேரவை நிகழ்வுகளில் அதிமுக உறுப்பினர்கள் இன்று கலந்து கொண்டனர். மேலும், சட்டப்பேரவைக்குள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் இன்று ஒருநாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். பதாகைகளை காட்டிய அதிமுக உறுப்பினர்களை அவையில் இருந்து அவைக் காவலர்களால் வெளியேற்றப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் முக.ஸ்டாலின், “அதிமுகவினர் தாம் சிக்கியுள்ள பல்வேறு வழக்குகளில் இருந்து தப்பிக்க காலில் விழுந்துள்ளனர். நொந்து நூடுல்ஸாகிப்போன அதிமுக தொண்டர்கள் தான், தியாகி. முதல்வர் பதவிக்காக காலில் விழுந்து ஏமாற்றினாரே அந்த அம்மையார்தான் தியாகி” என்று தியாகி யார் என குறிப்பிட்ட பேட்ஜை அதிமுகவினர் அணிந்து வந்ததற்கு முதல்வர் முக.ஸ்டாலின் பதிலளித்தார்.
Read More : BREAKING | சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் சஸ்பெண்ட்..!! சபாநாயகர் அப்பாவு உத்தரவு..!!