fbpx

கள்ளக்காதலிக்காக இப்படி இறங்கிட்டாரே..!! உறவினர்களை அழைத்து உயிரோடு இருக்கும் மனைவிக்கு சடங்கு..!!

கள்ளக்காதலியை திருமணம் செய்துக் கொள்வதற்காக உயிருடன் இருக்கும் மனைவிக்கு, 13ஆம் நாள் காரியம் செய்ய வேண்டும் என்று நண்பர்களையும், உறவினர்களையும் அழைத்து நம்ப வைத்திருக்கிறார் கணவர் ஒருவர்.

உத்தரப்பிரதேச மாநிலம் கண்ணுஜ் மாவட்டத்தில் உள்ள தலகிராம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பவானி சாராய் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பவன் படேல். இவருக்கு ஏற்கனவே பூஜா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். பவன் பட்டேல் தனது மனைவியை விட்டுவிட்டு தனது 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார். அப்போது, பவன் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்துள்ளார்.

பிறகு, காதலியை திருமணம் செய்வதற்காக மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து, பவன் மனைவி பூனா தனது 2 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு கான்பூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். அதே சமயம் பவன் தனது மனைவி இறந்து விட்டதாக கூறி அவருக்கு ஈமச்சடங்கு செய்திருக்கிறார்.

மேலும், காதலியை திருமணம் செய்து கொண்டு மனைவியின் 2 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு தன்னுடன் வைத்திருந்தார். இது குறித்து பவன் பட்டேலின் மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார். உயிருடன் இருக்கும் போதே தான் இறந்து விட்டதாக கூறி சடங்குகள் செய்து தனது மரணத்தை நியாயப்படுத்த முயற்சிப்பதாகவும், தனது குழந்தைகளை கடத்திச் சென்று, தன்னை அனாதை ஆக்கி விட்டதாகவும் மனைவி தெரிவித்துள்ளார்.

மேலும், “இரண்டு ஆண்டுகளுக்கு முன், எங்களுடன் வசிக்க வேறு ஒரு பெண்ணை தன்னுடன் அழைத்து வந்துள்ளார். அதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தும் அவர் கேட்கவில்லை. அதனால், 2 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்றேன். ஆனால், என் கணவர் நான் இறந்துவிட்டேன் என்று கூறி 13-வது நாள் காரியத்திற்காக ஏற்பாடு செய்தார். என் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து சடங்குகள் செய்தார்.

அவர் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களை ஈமசடங்குகள் காரியம் செய்ய வேண்டும் என்று கூறி அழைத்துள்ளார். இந்த நிகழ்வை தனது சமூக வலைத்தளத்திலும் பதிவிட்டுள்ளார். எனது மரணம் குறித்து எனது உறவினர்களிடம் தெரிவித்த பிறகு அவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளார். எனது குழந்தைகளையும் கடத்திச் சென்றுள்ளார் என புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More : ”பேய்கள் இருப்பது உண்மையென்றால் இதையெல்லாம் ஏன் செய்யல”..? அறிவியல் என்ன சொல்கிறது..?

English Summary

A husband convinces his friends and relatives to do the work on the 13th day for his wife who is still alive in order to marry an adulterer.

Chella

Next Post

TVK மாநாட்டு திடலில் 3 டன் குப்பைகள்..!! உணவுகளை வீசிச் சென்ற தொண்டர்களால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம்..!!

Mon Oct 28 , 2024
Around 3 tons of garbage accumulated in the conference grounds and the public threw away the leftover food, and the area started to smell bad.

You May Like