fbpx

’தியேட்டரையே நாசம் பண்ணிட்டீங்க’..!! ’இதுல லியோ படம் வேற பாக்கணுமா’..? அதிரடி முடிவெடுத்த ரோகிணி திரையரங்கம்..!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் உலகம் முழுவதும் நாளை வெளியாக இருக்கிறது. படத்திற்காக 5 நாட்களுக்கு சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்ட நிலையில், 7 மணி காட்சிக்கு அனுமதி இல்லை என்று அரசு தெரிவித்துள்ளது.

வெளியீட்டுக்கு முன்பே சர்வதேச அளவில் படம் சாதனை படைத்து வந்தாலும், சென்னையில் முக்கிய தியேட்டர்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்காமலேயே இருக்கிறது. தயாரிப்பாளர் தரப்புக்கும் திரையரங்க உரிமையாளர்களுக்கும் பங்கீட்டில் சரியான முடிவு எட்டப்படாததால் இந்த நிலை நீடிப்பதாக தெரிகிறது.

இந்நிலையில், சென்னையில் முக்கிய திரையரங்கமாக இருக்கும் ரோகிணியிலும் டிக்கெட்டிற்காக நேற்று காலை முதல் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில், முன்பதிவு குறித்த தகவல்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். இங்கு டிக்கெட் கிடைக்காது என்று போஸ்டர் ஒட்டப்பட்டது.

எப்படியும் இன்று டிக்கெட் கிடைக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், “லியோ இங்கு திரையிடப்படவில்லை” என்ற போஸ்டரை டிக்கெட் கவுண்டர் முன்பு வைத்துள்ளது ரோகிணி தியேட்டர் நிர்வாகம். இதனால், 2 நாட்களாக காத்திருந்த ரசிகர்கள் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்துள்ளனர்.

Chella

Next Post

’நான் இருக்க நிலைமையில இன்னொரு வழக்கா’..? கதறும் செந்தில் பாலாஜி..!! அது என்ன தேர்வு..?

Wed Oct 18 , 2023
அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்த சமயத்தில், நடைபெற்ற காலி பணியிடங்களுக்கான தேர்வில், பங்கேற்றவர்களின் மதிப்பெண் விவரங்களை வெளியிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சேலத்தை சேர்ந்த பி.தர்மராஜ், எம்.கோவிந்தராசு ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவில், ”கடந்த 2014 அரசு போக்குவரத்துக் கழகத்தில் 746 ஓட்டுநர்கள், 610 நடத்துநர்கள், 261 இளநிலை தொழில்நுட்ப உதவியாளர்கள், 13 இளநிலை பொறியாளர்கள், 40 உதவிப் பொறியாளர்கள் பணியிடத்தை நிரப்ப […]

You May Like