இந்தியாவில் ஆதார் எண் மற்றும் பான் எண் முக்கிய ஆதாரமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, நிதிப் பரிவர்த்தனைகளுக்கு பான் எண்ணை கொண்டே அனைத்து பரிவர்த்தனைகளையும் செய்ய மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. அதற்காக பான் மற்றும் ஆதாரை இணைக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கணிசமான எண்ணிக்கையிலான நபர்கள் இந்த இணைப்பை முடித்திருந்தாலும், காலக்கெடுவைத் தவறவிட்டவர்கள் இன்னும் இருக்கின்றனர்.
இதனால் அவர்கள் பின்விளைவுகளை இனி சந்திக்க நேரிடும் என்று கூறப்படுகிறது. அதாவது, மாத சம்பளம் பெறுபவர்களின் வங்கிக் கணக்கில் குறிப்பிட்ட தேதியில் பணம் செலுத்தப்படுவது கூட நிறுத்தி வைக்கப்பட வாய்ப்பு இருக்கிறதாம். அதேநேரத்தில் வங்கிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருப்பதால், அவை பான் மற்றும் ஆதார் இணைப்பு செய்யாதவர்களின் நிதிப் பரிவர்த்தனைகள் குறித்து விளக்கம் கேட்கும். இதனால், உங்களின் நிதிப் பரிவர்த்தனைகள் முழுமையடைவதில் தாமதங்கள் ஆகும்.
பான் – ஆதார் இணைக்காதவர்கள் கவனிக்க வேண்டியவை :
* பான் மற்றும் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் சம்பளம் பெறுவதில் சிக்கல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ஆனால், செயலிழந்த பான் எண் கொண்ட வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் சம்பளம் வரவு வைப்பது நிறுத்தி வைக்கப்படாது.
* பான் எண் செயலிழந்தாலும் நிறுவனங்கள் ஊழியரின் சம்பளத்தை வரவு வைப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், பரிவர்த்தனை உள்ளிட்ட விஷயங்களுக்கு நீங்கள் பான் எண்ணை அடையாளமாக காட்ட முடியாது.
* அதேநேரத்தில் எப்போதாவது இதில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால், சம்பளத்தை வரவு வைக்கும்போது பான் எண் தொடர்பாக பிரச்சனை எழுந்தால், அப்போது நீங்கள் உடனடியாக பான் எண் கொடுக்க வேண்டும். அந்த நேரத்தில் பான் கார்டை மீண்டும் ஆக்டிவேட் செய்ய அலைய வேண்டியிருக்கும்.
* பான் எண் செயலிழந்திருந்தாலும் ரூ.1,000 செலுத்தி அதனை நீங்கள் உபயோகப்படுத்தலாம். இதனை ஆன்லைன் வழியாகவே செய்து கொள்ள முடியும். தாமதமாக பான் – ஆதார் இணைப்பு செய்யும்போது உங்களின் பான் எண் செயல்பாட்டுக்கு வர அதிகபட்சமாக 30 நாட்கள் வரை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.