fbpx

Wow…! நீங்களும் தொழில்‌ முனைவோர்‌ ஆகலாம்…! தமிழக அரசு வழங்கும் இலவச பயிற்சி…! வயது வரம்பு என்ன…? முழு விவரம்…

வரும் 15.02.2023 அன்று சென்னை தொழில்‌ முனைவோர்‌ மேம்பாடு மற்றும்‌ புத்தாக்க நிறுவன வளாகத்தில்‌ தொழில்‌ முனைவோர்க்கான விழிப்புணர்வு முகாம்‌ நடைப்பெற உள்ளது. இந்த முகாம்‌ காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம்‌ 1.30 மணி வரை நடைபெறும்‌. சுயமாக தொழில்‌ தொடங்க விரும்பும்‌ 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும்‌ இந்த முகாமில்‌ கலந்து கொள்ளலாம்‌.

இடஒதுக்கீடு

முதல் கட்டமாக, சொந்தமாக தொழில்‌ தொடங்குவதில்‌ உள்ள நன்மைகள்‌,தொழில்‌ வாய்ப்புகள்‌, தொழிலை தெரிவு செய்து எப்படி தொழில்‌ துவங்கவிருக்கும்‌ முனைவோருக்கு அரசு மற்றும்‌ பிற நிறுவனங்கள்‌ வழங்கும்‌ உதவிகள்‌ மற்றும்‌ திட்டங்கள்‌ ஆகியன பற்றி இம்முகாமில்‌ விவரிக்கப்படும்‌. பயிற்சி முகாமின்‌ இறுதியில்‌ தொழில்‌ தொடங்க விரும்பும்‌ நபர்களின்‌ பெயர்கள்‌ பெறப்பட்டு அவர்கள்‌ அடுத்த கட்ட பயிற்சிக்கு அழைக்கப்படுவர்‌.

அடுத்த கட்டமாக 3 நாள்‌ திட்ட அறிக்கை தயாரித்தல்‌ பயிற்சி மற்றும்‌ தொழில்‌ முனைவோர்‌ மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டு அவர்களுக்கு நிதி உதவிகள்‌ பெற ஆலோசனைகள்‌ வழங்கப்படும்‌. மாவட்ட தொழில்‌ மையங்களோடு இணைந்து 5 நாள்‌ தொழில்‌ முனைவோர்‌ மேம்பாட்டு பயிற்சிகளும்‌ EDII வழங்கி வருகிறது. இப்பயிற்சி மூலம்‌ நிதி உதவி பெறும்‌ திட்டங்களில்‌ குறிப்பிட்டுள்ள கட்டாய பயிற்சியிலிருந்து விலக்கு பெறலாம்‌. எனவே, அரசு திட்டங்கள்‌ பற்றிய விளக்கங்களும்‌ அதன்‌ மூலம்‌ பயன்பெறும்‌ வழிவகைகளும்‌ எற்படுத்தி தரப்படும்‌ என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்த நபர்!... கையும் களவுமாக பிடித்த மக்கள்!... சென்னையில் அதிர்ச்சி!

Sun Feb 12 , 2023
சென்னையில் பொது குளியளறையில் செல்போனை மறைத்து வைத்து பெண்கள் குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்துவந்த நபரை கையும் களவுமாக பிடித்து மக்கள் போலீசில் ஒப்படைத்தனர். சென்னை வடபழனி பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் 10க்கும் மேற்பட்ட வீடுகளும் அவற்றிற்கு பொது குளியலறையும் உள்ளது. இந்தநிலையில் அதே பகுதியை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி அங்குள்ள குளியளறையில் குளித்துக்கொண்டிருந்தபோது, ஜன்னல் வழியாக மர்மநபர் ஒருவர் வீடியோ எடுப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதனை […]

You May Like