fbpx

”என்னை இப்படி ஏமாத்திட்டியே”..!! காதலியை கொன்று புதைத்த காதலன்..!! 10 மாதங்களுக்கு பின் வெளிவந்த அதிர்ச்சி சம்பவம்..!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் லிவ்-இன் ரிலேஷன்ஷிப் இருந்த பெண் ஒருவர் தனது காதலனால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 10 மாதங்களுக்கு பிறகு அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் சூரஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அவர்களது கிராமத்தில் சீமா பாண்டோ என்ற பெண் தனது காதலன் சந்திரிகா பிரசாத் ராஜ்வாடேவுடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், திடீரென தனது மகளை காணவில்லை என அந்த பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் புகாரளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணையை தீவிரப்படுத்தினர். அந்த பெண்ணை வலைவீசி தேடி வந்தனர். ஒரு கட்டத்தில் காதலன் சந்திரிகா பிரசாத் மீது போலீசாருக்கு சந்தேகம் வந்தது.

இதையடுத்து, அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. விசாரணையில், கடந்த 10 மாதங்களுக்கு முன்பு தனது காதலி தகாத உறவு வைத்திருந்ததாக எழுந்த சந்தேகத்தால், அவரை கொலை செய்து உடலை புதைத்ததாக கூறினார். இதைக் கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, மரணத்திற்கான காரணத்தை உறுதி செய்வதற்காக அந்தப் பெண் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட காட்டுப்பகுதிக்கு போலீசார் விரைந்தனர்.

பின்னர், அங்கு புதைக்கப்பட்ட உடலைத் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதற்கிடையே, தனது மகள் காணவில்லை என்று புகார் அளித்த அந்த பெண்ணின் தந்தை சோர் லால் பாண்டோவும் கடந்த 7 மாதங்களாக காணவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More : கனமழையால் தத்தளிக்கும் மக்கள்..!! ஆவின் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!! சென்னை மக்களே நோட் பண்ணிக்கோங்க..!!

English Summary

During the investigation, he said that he had murdered his girlfriend and buried her body 10 months ago, suspecting that she was having an inappropriate relationship.

Chella

Next Post

காட்டுக்குள் பேசிக் கொண்டிருந்த காதல் ஜோடி..!! காதலனை தாக்கிவிட்டு 15 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்..!!

Wed Nov 27 , 2024
The incident of a girl who went to a temple being kidnapped and raped in a forest has caused shock.

You May Like