இந்த உலகில் கடவுள் இருப்பது உண்மை, என்றால் பேய், பிசாசுகள் இருப்பது உண்மையாகும். நல்ல சக்தி என்ற ஒன்று இருந்தால், தீய சக்திகள் நிச்சயம் இருக்கும். நாம் சிறுவயதில் இருந்தே பார்த்த படங்கள், பாடல்கள் வைத்து அமானுஷ்யம் நம்முடைய கண் முன்னே வந்து செல்வது போன்று பிம்மம் தோன்றும் என்கிறார்கள். பேய், பிசாசுகள் உண்மையில் இருக்கிறதோ, இல்லையோ இந்தியாவில் திகிலூட்டும் அமானுஷ்ய இடங்கள் என்று சில இடங்கள் சொல்லப்படுகிறது.
சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு, குல்தாரா நகரம் பாலியில் இருந்து இடம்பெயர்ந்து இங்கு குடியேறிய பாலிவால் பிராமணர்களின் வசிப்பிடமாக இருந்தது. இந்த மாநிலத்தின் முதல்வர், கிராமத் தலைவரின் மகளை காதலித்து, அவளை வலுக்கட்டாயமாக திருமணம் செய்து கொள்ள விரும்பினார். முழு கிராமமும் இதனை தடுத்து, அந்த பெண்ணை காப்பாற்ற அவர்கள் கிராமத்தை விட்டு வெளியேறி, இனி ஒருபோதும் யாரும் இந்த ஊரில் குடியிருக்கக்கூடாது என்று சபித்தனர். ஒருவேளை அந்த ஊரில் யாரும் இரவைக் கழிக்கவோ அல்லது குடியேறவோ துணிந்தாலும், அவர் ஒருபோதும் திரும்பி வரமாட்டார் என்று புராணங்கள் கூறுகின்றது.
மேற்கு வங்கத்தில் உள்ள குர்சியோங் பகுதியில் உள்ள விக்டோரியா உயர்நிலை பள்ளிஒன்றில் பல அமானுஷ்யங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பகுதியில் இரவில் சென்ற யாரும் இதுவரை திரும்பி வந்ததில்லை என்று கூறப்படுகிறது. மேலும், சில ஆண்டுகளுக்கு முன்னர் இதற்கு அருகில் உள்ள காட்டு பகுதியில் நிறைய பிணங்களின் உடல்களை கண்டெடுத்ததால் இப்படி மக்கள் கருதி வருகின்றனர். உயிர்களை மூழ்கடித்துள்ள ஒரு பயங்கரமான கடற்கரை ஆகும்.
உத்தரகண்ட் மாநிலத்தில் முசோரி என்கிற இடத்தில் இந்த லம்பி தேஹார் சுரங்கங்கள் உள்ளன. இங்கு சுண்ணாம்பு அதிகம் கிடைத்து வந்தது. ஆனால், இந்த பகுதியில் பல்வேறு விபத்துகள் நடந்ததால் தற்போது இது செயல்படாமல் உள்ளது. இங்கு ஏராளமான உயிரிழப்புகள் மர்ம மரணமாக நிகழ்ந்துள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.