பிரபல திரைப்பட விமர்சகரும் வர்த்தக ஆய்வாளருமான கௌசிக் நேற்று மாரடைப்பால் காலமானார்.
புகழ்பெற்ற திரைப்பட விமர்சகரான கௌசிக், பிரபல யூ டியூப் சேனலில் வீடியோ ஜாக்கியாகவும் இருந்து வந்தார்.. மேலும் திரைப்படங்களின் பாக்ஸ் ஆபிஸ் உள்ளிட்ட விவரங்களை கணிக்கும் வர்த்தக ஆய்வாளராகவும் இருந்தார்.. தனது திரைப்பட விமர்சனங்கள் மற்றும் தமிழ் திரையுலகைச் சேர்ந்தவர்களை நேர்காணல் செய்ததன் மூலம் பிரபலமானவர் கௌசிக்.. இந்நிலையில் நேற்று அவர் மாரடைப்பால் காலமானார்.. அவருக்கு வயது 35.. மாரடைப்பால் அவர் தூக்கத்திலேயே இறந்துவிட்டதாக கூறப்படுகிறது..
ரோகினி மற்றும் கருணாகரன் நடிப்பில் உருவாகி உள்ள ஜிவி 2 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கௌசிக் கலந்து கொள்ளவிருந்தார். அவர் நிகழ்ச்சிக்கு வராததால், அவரது நண்பர்கள் அவருக்கு போன் செய்துள்ளனர்.. ஆனால் அவர் போனை எடுக்கவில்லை என்று தெரிகிறது.. அதன்பிறகே அவர் வீட்டுக்கு சென்று பார்த்த போது தான் உயிரிழந்தது தெரியவந்துது.. இந்த சம்பவம் தமிழ் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. அவரின் மறைவுக்கு நடிகர்கள் தனுஷ், விஜய் தேவரகொண்டா, துல்கர் சல்மான், இயக்குனர் வெங்கட்பிரபு, நடிகைகள் கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்..