fbpx

ஈரோடு அருகே இளம் பெண் தீக்குளித்து தற்கொலை…..!

ஈரோடு அடுத்துள்ள ஞானிப்பாளையம் குமாரவலசு மயிலாடி பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜ் (36) தொழிலாளியான இவருடைய மனைவி சங்கீதம் (33) இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன.

இந்த நிலையில், சங்கீதத்திற்கும், யுவராஜ்க்கும் மகனை பள்ளியில் சேர்ப்பது குறித்து கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறில் சங்கீதம் மன வேதனை அடைந்து சம்பவம் நடைபெற்ற அன்றைய தினம் வீட்டிற்கு அருகே உள்ள கழிப்பறைக்குள் சென்று கதவை தாழட்டு மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்ய முயற்சி செய்தார்.

இதைக்கண்ட அவரது குடும்பத்தைச் சார்ந்தவர்கள் சங்கீதத்தை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை வழங்கப்படும் பலன் இல்லாமல் சங்கீதம் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக சங்கீதத்தின் தந்தை ஈஸ்வரன் வெள்ளோடு காவல் நிலையத்தில் புகார் வழங்கினார். அந்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Post

பெஸ்டியால் வந்த பிரச்சனை..!! காதல் மனைவியை துப்பட்டாவால் கழுத்தை நெறித்து கொலை செய்த கொடூரன்..!!

Thu Jun 1 , 2023
கோவை மாவட்டம் மத்துவராயபுரம் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன், அம்முகுட்டி தம்பதியரின் மகன் சஞ்சய் (20). இவர், பேரூர் தமிழ் கல்லூரியில் 2ஆம் ஆண்டு பிகாம் பயின்று வருகிறார். அதே கல்லூரியில் படிக்கும் கருப்புசாமி என்பவரின் மகள் ரமணி. சஞ்சய்யும் ரமணியும் காதலித்து வந்த நிலையில், கடந்த 6ஆம் தேதி பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர். பின்னர், இருவரும் மத்துவராயபுரம் பகுதியில் உள்ள குறிஞ்சி நகரில் சஞ்சய்யின் பெற்றோருடன் […]
பெஸ்டியால் வந்த பிரச்சனை..!! காதல் மனைவியை துப்பட்டாவால் கொலை செய்த கொடூரன்..!! கோவையில் அதிர்ச்சி..!!

You May Like