fbpx

இளம்பெண் கொலை..!! வெல்ல ஆலைகளுக்கு தீவைப்பு, 200 வாழை மரங்கள் வெட்டி சாய்ப்பு..!! பெரும் பரபரப்பு..!!

இளம்பெண் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 200 வாழை மரங்கள் மர்மநபர்களால் வெட்டி சாய்க்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் அருகே விகரைப்பாளையத்தைச் சேர்ந்த இளம்பெண் கடந்த மார்ச் 11ஆம் தேதி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த கொலை வழக்கில் அங்குள்ள வெல்ல ஆலையில் பணிபுரிந்து வந்த 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். நித்யா கொலை செய்யப்பட்ட பிறகு அந்தப் பகுதிகளில் செயல்பட்டு வரும் வெல்ல ஆலைகளுக்கு மர்ம நபர்கள் அடிக்கடி தீ வைத்து வருகின்றனர். கடந்த மே 12ஆம் தேதி வடகரையாத்தூரில் உள்ள கரும்பு ஆலைக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததில் 4 வடமாநில தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். இதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜேஷ் கெண்ட் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில், வடகரையாத்தூர் அருகே புதுப்பாளையத்தில் முருகேசன் என்பவருக்கு சொந்தமான வாழை தோட்டத்தில் மர்ம நபர்கள் இன்று அதிகாலை புகுந்து ரூ.5 இலட்சம் மதிப்புள்ள 200 வாழை மரங்களை வெட்டி சாய்த்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன், ஏ.டி.எஸ்.பி ராஜூ உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு நடத்தினர். பின்னர், வாழை மரங்களை வெட்டி சாய்த்து விட்டு தப்பி ஓடிய மர்ம நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர். ஜேடர்பாளையத்தில் வெல்ல ஆலைகளுக்கு தீவைப்பு, வாழை மரங்கள் வெட்டி சாய்ப்பு உள்ளிட்ட சம்பவங்களால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.

Chella

Next Post

அதிவேகமாக வந்த அமைச்சரின் கார்..!! தூக்கி வீசப்பட்ட புதுமண தம்பதி..!! மாப்பிள்ளை துடிதுடித்து பலி..!!

Fri May 19 , 2023
சென்னை-பாண்டிச்சேரி இடையேயான கிழக்கு கடற்கரை சாலை எப்போதும் பரபரப்பாகவே இருக்கும். அந்த சாலையில் வாகனங்கள் அதிவேகமாக இயக்கப்படுவதால் விபத்துகளும் அடிக்கடி நிகழும். இந்நிலையில், அமைச்சர் ஒருவரின் கார் மோதி புதுமாப்பிள்ளை இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த குன்னத்தூர் கிழக்கு கடற்கரை சாலையில் சென்னையில் இருந்து, மயிலாடுதுறை நோக்கி அமைச்சர் மெய்யநாதனின் கார் சென்று கொண்டிருந்தது. அந்த கார் வேகமாக சென்ற போது, எதிரே வந்த […]
அதிவேகமாக வந்த அமைச்சரின் கார்..!! தூக்கி வீசப்பட்ட புதுமண தம்பதி..!! மாப்பிள்ளை துடிதுடித்து பலி..!!

You May Like