fbpx

இளம்பெண்ணை கொலை செய்து பலாத்காரம்..!! நகை, பணத்துடன் எதற்காக தலைமறைவு..? திடுக்கிடும் தகவல்..!!

ஆசைக்கு இணங்க மறுத்த கள்ளக்காதலியின் மகளை கொலை செய்து பலாத்காரம் செய்து விட்டு, நகை, பணத்துடன் தலைமறைவான கள்ளக்காதலனை தனிப்படை போலீசார் மும்பையில் அதிரடியாக கைது செய்தனர்.

சென்னை பூந்தமல்லியை அடுத்த சென்னீர்குப்பம், மேட்டுத் தெருவை சேர்ந்தவர் அம்சவல்லி (40). இவர், அதேபகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் கணவரை பிரிந்து, தனது மகளுடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், அம்சவல்லிக்கும், அதே பகுதியை சேர்ந்த ராஜூ (38) என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டு, நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து, அவர் அடிக்கடி அம்சவல்லியின் வீட்டுக்கு வந்து உல்லாசமாக இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த வாரம் வீட்டில் தனியாக இருந்த அம்சவல்லியின் மகள் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். மேலும், அவர் அணிந்திருந்த கம்மல், கொலுசு மற்றும் பணம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இளம்பெண்ணை கொலை செய்து பலாத்காரம்..!! நகை, பணத்துடன் எதற்காக தலைமறைவு..? திடுக்கிடும் தகவல்..!!

இதுகுறித்து, பூந்தமல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். அதில், அம்சவல்லி வேலைக்கு சென்ற பிறகு, அவரது மகள் மட்டும் வீட்டில் தனியாக இருப்பதை நோட்டமிட்டு வந்த கள்ளக்காதலன் ராஜூ, அவரை கழுத்தை நெரித்து படுகொலை செய்துவிட்டு பலாத்காரம் செய்ததும், கம்மல், கொலுசு போன்றவற்றை கொள்ளையடித்து விட்டு மும்பைக்கு தப்பிச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து, மும்பைக்கு தப்பிச் சென்ற ராஜூவை பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. மும்பைக்கு விரைந்து சென்ற தனிப்படையினர் அங்கு பதுங்கியிருந்த ராஜூவை கைது செய்தனர்.

இளம்பெண்ணை கொலை செய்து பலாத்காரம்..!! நகை, பணத்துடன் எதற்காக தலைமறைவு..? திடுக்கிடும் தகவல்..!!

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ”உளுந்தூர்பேட்டையை சேர்ந்தவர் ராஜூ. இவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியை பிரிந்து விட்டார். சிறிது காலம் மும்பையில் இருந்த ராஜூ மீது அங்கு பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர், பூந்தமல்லியில் வசித்தபோது அம்சவல்லியுடன் தொடர்பு ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறி உள்ளது. அம்சவல்லியை சந்திக்க வந்தபோது அவரது மகளை பார்த்த ராஜூ, அவரை அடைய நினைத்துள்ளார். இதையடுத்து, சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்தவரிடம் ஆசைக்கு இணங்குமாறு ராஜூ வற்புறுத்தியுள்ளார். அதற்கு அவர் மறுத்ததால், அவரை கழுத்தை நெரித்து படுகொலை செய்துவிட்டு அதன்பிறகு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் நகை, பணத்துக்காக கொலை நடந்தது போல இருக்க வேண்டும் என்பதற்காக கம்மல், கொலுசு, பணத்தை எடுத்துக் கொண்டு மும்பைக்கு தப்பியோடி விட்டார்” என தெரிவித்தனர்.

Chella

Next Post

மாடல் அழகியை தனது ஆண் நண்பர்களுக்கு விருந்தாக்கிய தோழி..!! விடிய விடிய சுற்றித்திரிந்த கார்..!! மீண்டும் அதிர்ச்சி

Sun Nov 20 , 2022
தனது தோழியை 3 ஆண் நண்பர்களுக்கு விடிய விடிய விருந்தாக்கிய சம்பவம் கேரளாவில் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கொச்சி காக்கநாடு பகுதியைச் சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். இவர் மாடல் அழகியாக உள்ளார். ராஜஸ்தானை சேர்ந்த தோழி இவருக்கு மிகவும் நெருக்கமானவர். அந்த பெண், இந்த மாடல் அழகியை கொச்சி எம்ஜி சாலையில் உள்ள டான்ஸ் பாருக்கு பார்ட்டிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கு ராஜஸ்தான் பெண்ணின் 3 […]
மாடல் அழகியை தனது ஆண் நண்பர்களுக்கு விருந்தாக்கிய தோழி..!! விடிய விடிய சுற்றித்திரிந்த கார்..!! மீண்டும் அதிர்ச்சி

You May Like