fbpx

பணத்திற்காக தற்காலிகமாக திருமணம் செய்யும் இளம்பெண்கள்..!! ஒரே பெண்ணுடன் 20 நபர்கள்..!! பெத்தவங்களே இப்படி செய்யலாமா..?

ஆசிய நாடுகளில் ஒன்றான இந்தோனேசியா ஆயிரக்கணக்கான தீவுக்கூட்டங்களை உள்ளடக்கிய நாடாகும். அழகிய கடற்கரைகள், மலைப்பகுதிகள் என சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக இயற்கை அழகினை கொண்ட நாடாக இருக்கிறது. இதனால், இந்த நாட்டிற்கு அதிக அளவு சுற்றுலாப் பயணிகள் செல்வது வழக்கம். இந்நிலையில் தான், இந்தோனேஷியாவின் கிராமப்புற பகுதிகளில் ஏழை, எளிய பின்னணியை கொண்ட இளம்பெண்கள் தங்கள் குடும்ப செலவுகளை சமாளிக்க சுற்றுலா வரும் பயணிகளுடன் தற்காலிக திருமணம் செய்து கொள்வதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது.

சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக அவர்கள் தங்கியிருக்கும் காலம் வரை, தற்காலிக திருமணங்கள் அதிகம் நடைபெற்று வருகிறதாம். வாரக்கணக்கில் அல்லது மாதக்கணக்கில் சுற்றுலா பயணிகள் தங்கி இருக்கும் வரை இந்த தற்காலிக திருமணம் நடைமுறையில் இருக்குமாம். அவர்கள் தங்கி இருக்கும் வரை ஏழை இளம் பெண்கள் அவர்களுக்கு மனைவியாக வாழ்ந்து, பின் சுற்றுலா முடிந்து, சுற்றுலா பயணிகள் தங்கள் சொந்த நாட்டுக்கு திரும்பும் போது அந்த திருமணம் ரத்து செய்யப்படுமாம்.

பல இளம் பெண்கள் அவர்களது பெற்றோர்களாலே இந்த தற்காலிக திருமணத்திற்கு கட்டாயப்படுத்தப்படுகின்றனர். பல இளம் பெண்களுக்கு 20 முறை கூட சுற்றுலா பயணிகளுடன் திருமணம் நடந்துள்ளதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தற்காலிக திருமணம் செய்த இந்தோனேசியாவை சேர்ந்த சஹயா என்ற பெண் தனது வேதனையை பகிர்ந்துள்ளார்.

அந்த பெண் கூறுகையில், “இதுவரை சுற்றுலா பயணிகள் 15 பேரை திருமணம் செய்திருப்பேன். எனது முதல் கணவர் 50 வயதான சவுதி அரேபிய நபர். அவர் எனக்கு ரூ.71,412 கட்டணமாக கொடுத்தார். பிறகு ஏஜெண்ட் கட்டணம் பிடித்த பிறகு எனக்கு பாதி தொகைதான் கிடைத்தது. திருமணம் முடிந்த 5 நாட்கள் என்னுடன் தங்கியிருந்தார். பின்னர் சொந்த நாட்டிற்கு திரும்பியதால் விவாகரத்து பெற்றுக்கொண்டோம். ஒரு திருமணத்திற்கு அமெரிக்க டாலர் மதிப்பு படி 300 முதல் 500 வரை கிடைக்கும். இதை வைத்து எனது வீட்டு வாடகை, நோய்வாய்ப்பட்ட எனது தாத்தா, பாட்டியை கவனித்துக் கொள்கிறேன்” என்றார்.

அதேபோல், நிஷா என்ற பெண் கூறுகையில், “குறைந்தது 20 தற்காலிக திருமணம் செய்திருக்கிறேன். தற்போது நான் இந்தோனேஷியாவில் ஒரு குடியேற்ற அதிகாரியை திருமணம் செய்து அவருடன் செட்டில் ஆகிவிட்டேன். எனக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். புதிய வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் நடத்தி வருகிறேன். இனிமேல் ஒருநாளும் அந்த இருண்ட நாட்களுக்கு செல்ல மாட்டேன்” என்றார்.

Read More : Chennai | கவர்ச்சி நடிகையின் வீட்டிற்குள் புகுந்து கத்தியை காட்டி மிரட்டிய மர்ம நபர்கள்..!! சோனாவுக்கு என்ன ஆச்சு..?

English Summary

So far I have married 15 tourists. My first husband was a 50 year old Saudi Arabian man.

Chella

Next Post

கொட்டிக் கிடக்கும் காலிப்பணியிடங்கள்..!! டிப்ளமோ முடித்திருந்தால் போதும்..!! தேர்வு கிடையாது..!!

Fri Oct 4 , 2024
Tamil Nadu Government Transport Corporation has released a job notification for Graduate, Engineering and Diploma Graduates.

You May Like