திண்டுக்கல் மாவட்டம் பழனி சாலையில் இருக்கின்ற முருகபவனம் பகுதியில் பாரத் பெட்ரோல் பங்க் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பெட்ரோல் பங்க் முன்பாக சாலையின் ஓரத்தில் வெல்டிங் பட்டறை தொழிலாளியாக அழகு பாண்டி என்பவர் பணியாற்றி வருகிறார். இவருடன் 2 நபர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் அவர்கள் இருவரும் அழகு பாண்டியை பெட்ரோல் பங்க் நிலையத்திற்குள் இருக்கும் ஒரு அறைக்கு அழைத்துச் சென்று கழுத்து முகம் போன்ற பகுதிகளில் பயங்கரமாக வெட்டியதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே இருந்தால் இது தொடர்பாக திண்டுக்கல் நகர காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதோடு அழகு பாண்டியன் உடலை பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர் திண்டுக்கல் பழனி பிரதான சாலையில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கின்ற பகுதிகளில் இளைஞர் ஒருவர் பட்ட பகலில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்கள் இடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.