fbpx

எச்சரிக்கை!!! வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற வாலிபர்களுக்கு நேர்ந்த சோகம்..

நெல்லை மாவட்டம் களக்காடு அடுத்த மாவடி பகுதியை சேர்ந்தவர் எபனேசர். இவரது தந்தை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த நிலையில், இவருக்கு மங்கலம் என்ற தாய் உள்ளார். இந்நிலையில், தனது தந்தை வைத்து நடத்திய முடி திருத்தும் நிலையத்தை, தற்போது எபனேசர் பார்த்து வந்துள்ளார். மேலும், கிள்ளிகுளம் பகுதியிலும் முடி திருத்தும் நிலையம் ஒன்றை வைத்துள்ளார். இந்நிலையில், முகநூல் மூலம் கிடைத்த தொடர்பை வைத்து, மலேசியா நாட்டில் முடி திருத்தும் பணிக்காக எபனேசர் விண்ணப்பித்துள்ளார். வெளிநாட்டிற்கு சென்றால் அதிக சம்பளம் கிடைக்கும் அதன் மூலம் தனது குடும்பத்தின் வறுமை நிலையை மாற்றிவிடலாம் என்ற நம்பிக்கையில், கடந்த ஜூன் மாதம் சுற்றுலா விசா மூலம் முகிலன் என்பவரது முடி திருத்தும் நிலையத்திற்கு எபனேசர் பணிக்குச் சென்றுள்ளார்.

மேலும், அங்கு அவருக்கு மாதம் ரூபாய் 35,000 ஊதியமாக வழங்குவதாக கூறியுள்ளனர். அங்கு அவருக்கு பணி திருப்தியாக இருந்த நிலையில், இவர் தனது உறவினர்களான கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அரவிந்த் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரையும் மலேசியாவிற்கு அழைத்துள்ளார். அதனால், அவர்களும் நம்பிக்கையுடன் கடந்த ஜூலை மாதம் முகிலனின் முடி திருத்தும் நிலையத்திற்கு பணிக்காக மலேசியா சென்றுள்ளனர். ஆனால் அங்கு மூவருக்கும் சம்பளம் முறையாக கொடுக்கப்படவில்லை. அதே சமயம், ஒர்க் பெர்மிட் வாங்கி தருவதாக கூறி முதல் மாத சம்பளத்தை தரவில்லை.

இதுகுறித்து முகிலனிடம் கேட்டபோது, சொந்த ஊருக்கு செல்ல முடியாது என மிரட்டும் தொனியில் பேசியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த எபநேசர், தனது தாயிடம் நடந்தது குறித்து கூறியுள்ளார். பின்னர் இங்கிருந்து முகிலனை தொடர்பு கொண்டு பேசியபோது நஷ்ட ஈடாக 2 லட்சம் கொடுத்துவிட்டு உங்களது மகனை கூட்டிச் செல்லுங்கள் என்று கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த தாய் வேறு வழி இல்லாமல், வீட்டில் இருந்த பணம் நகைகளை வைத்து ஒரு லட்ச ரூபாயை முகிலன் வங்கிக் கணக்கிற்கு அனுப்பியுள்ளார். ஆனால் முகிலன் மீதமுள்ள தொகையையும் செலுத்த வேண்டும் என கட்டாயப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் கையில் பணம் இல்லாமல் அவதிப்பட்டு வந்த எபநேசர், மணிகண்டன் மற்றும் அரவிந்த் மலேசியாவில் இருந்து தப்பி, கோலாலம்பூர் அருகே உள்ள மச்சித் இந்தியா பகுதிக்கு வந்துள்ளனர். பின்னர், அங்குள்ள கோவிலில் கிடைக்கும் அன்னதானத்தை சாப்பிட்டு வந்துள்ளனர். மகனின் நிலைமை அறிந்த தாய், தனது மகனை மீட்டு தர வேண்டும் என நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

Maha

Next Post

கவனம்!! மூதாட்டிக்கு ஆப்பிள் சாப்பிட கொடுத்து விட்டு, பெண் செய்த காரியம்..

Fri Sep 29 , 2023
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் வசித்து வருபவர், சிவசேகர். அரசு பள்ளி ஆசிரியரான இவருக்கு ஜெயந்தி என்ற மனைவி உள்ளார். ஜெயந்தியும் ஆசிரியையாக வேலை செய்து வரும் நிலையில், கணவன், மனைவி இருவரும் கடந்த 26ம் தேதி வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ளனர். இதனால் வீட்டில் சிவசேகரின் தாய், பெருமா மற்றும் அவரது வயதான உறவினர் ஒருவருவரும் இருந்துள்ளனர். அப்போது, அடையாளம் தெரியாத பெண் ஒருவர் பெருமாவிடம், நான் ஜெயந்தியின் தோழி […]

You May Like