fbpx

”உங்கள் உழைப்பு உங்களுக்கு”..!! காக்கா முட்டை பட இயக்குனர் வீட்டில் கொள்ளை..!! திருடர்கள் எழுதி வைத்த கடிதம்..!!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி எழில் நகரைச் சேர்ந்தவர் இயக்குநர் மணிகண்டன். காக்கா முட்டை, கடைசி விவசாயி உள்ளிட்ட தேசிய விருது பெற்ற படங்களை இயக்கிய மணிகண்டன், தற்போது பட வேலை சம்பந்தமாக குடும்பத்துடன் கடந்த 2 மாதங்களாக வசித்து வருகிறார். இந்நிலையில், பூட்டி இருந்த அவரது வீட்டில் கடந்த 8ஆம் தேதி மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பிரோவில் இருந்த கடைசி விவசாயி திரைப்படத்திற்காக மத்திய அரசால் வழங்கப்பட்ட இரு தேசிய விருதுக்கான வெள்ளி பதக்கங்கள், 5 பவுன் தங்க நகை, ஒரு லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.

பிரபல இயக்குநர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், இன்று மணிகண்டன் வீட்டில் பாலித்தீன் பையில் ”அய்யா எங்களை மன்னித்து விடுங்கள் உங்கள் உழைப்பு உங்களுக்கு” என்ற மன்னிப்பு கடிதத்துடன் தேசிய விருதுக்கான வெள்ளி பதக்கங்களை மட்டும் கொள்ளை கும்பல் தொங்க விட்டுச் சென்றுள்ளனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் தேசிய விருதுக்கான பதக்கங்களை கைப்பற்றி தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Chella

Next Post

#BREAKING | செந்தில் பாலாஜியின் ராஜினாமா கடிதம் ஏற்பு..!! ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

Tue Feb 13 , 2024
செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக, வழங்கிய கடிதத்தை ஏற்பதாக ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், 12.2.2024 அன்று, அமைச்சர் செந்தில்பாலாஜியின் ராஜினாமாவை ஏற்றுக் கொள்ள பரிந்துரைத்து எழுதிய கடிதத்தின் அடிப்படையில், அந்த பரிந்துரையை மாண்புமிகு ஆளுநர் அவர்கள் அங்கீகரித்து ராஜினாமாவை ஏற்றுக்கொண்டுள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. பண மோசடி வழக்கில் கடந்தாண்டு ஜூன் 13ஆம் தேதி […]

You May Like