fbpx

உங்களுடைய பான் கார்டு இனி யூஸ் ஆகாது..!! சிக்கலில் மாட்டிக்கிட்டீங்க..!! ஆர்டிஐ வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!

இந்தியர்களின் தனிப்பட்ட அடையாளமாக இருக்கும் ஆதார் எண்ணை குடிமக்களின் முக்கியமான ஆவணங்களுடன் இணைப்பதை கட்டாயமாக்கியுள்ளது மத்திய அரசு. அதன்படி குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை மற்றும் பான் கார்டு உள்ளிட்ட அனைத்து ஆவணங்களுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.

இந்தியாவில் வரி ஏய்ப்பை தடுக்கும் விதமாக பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலமாக போலி ஆதார் மற்றும் பான் கார்டு பயன்பாடு தடுக்க முடியும். அதே சமயம் பான் கார்டு மூலமாக நடைபெறும் பணம் மோசடிகள் கண்டறிய உதவும் என்று குறிப்பிட்டு இருந்தனர்.

நடப்பு ஆண்டு அபராதத்துடன் 2023ஆம் ஆண்டு ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டது. நீட்டிக்கப்பட்ட கால அவகாசத்தில் தங்கள் பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைக்க அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராதம் செலுத்திய பிறகே பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைக்க முடியும்.

இந்நிலையில், இந்தியாவில் 70.24 கோடி பான் கார்டு வைத்திருப்பவர்கள் உள்ளனர், அவர்களில் 57.25 கோடி பேர் பான் கார்டுகளை ஆதாருடன் இணைத்துள்ளனர். 12 கோடிக்கும் அதிகமான பான் கார்டுகள் ஆதாருடன் இணைக்கப்படவில்லை என்றும், அதில் 11.5 கோடி கார்டுகள் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

பெரும் சோகம்...! பிரபல இயக்குனர் அற்புதன் காலமானார்...! திரைப்பிரபலங்கள் இரங்கல்...!

Thu Nov 9 , 2023
தமிழ் சினிமாவில் 90-களின் இறுதியில் பிரபல இயக்குனராக திகழ்ந்த அற்புதன் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். அவரது மரணச் செய்தி திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 2002-ல் ‘அற்புதம்’ படத்தின் மூலம் நடன இயக்குநரும், நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸை முன்னணி ஹீரோவாக அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் அற்புதன். சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்த இந்தப் படம், ராகவா லாரன்ஸுக்கு […]

You May Like