சென்னை அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, டக் அவுட் ஆனதையடுத்து அதிக முறை டக் அவுட் ஆனவர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்து ஐபிஎல் வரலாற்றில் மிகவும் மோசமான சாதனையை படைத்துள்ளார்.
ஐபிஎல் 16வது சீசனின் 49வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில், சென்னை – மும்பை அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களம் இறங்கிய மும்பை அணியின் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர். 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து மும்பை அணி 139 ரன்கள் சேர்த்தது. 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி வீரர்கள் பொறுப்பாக விளையாடியதன் மூலம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இப்போட்டியில், மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா டக் அவுட் ஆனார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை (16 முறை) டக் அவுட் ஆன வீரர் என்ற மோசமான சாதனையை படைத்தார். இதைப்போலவே பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியிலும், ரோகித் டக் அவுட் ஆன, நிலையில், தற்போதும் அவர் டக் அவுட் ஆகியிருப்பது, அவரது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், ஐபிஎல் வரலாற்றில் அதிகமுறை டக்-அவுட் ஆன வீரர்களின் பட்டியலில் ரோஹித் சர்மாவுக்கு அடுத்ததாக சுனில் நரைன் (15), மந்தீப் சிங் (15),
தினேஷ் கார்த்திக் (15) ஆகியோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.