நம் நாட்டில் ரேஷன் அட்டை என்பது ஒரு முக்கிய ஆவணமாக இருக்கிறது. ஆகையால், அதை எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் ரேஷன் கார்டுதாரர்கள் இனி கேஒய்சி விவரங்களை இணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, அம்மாநிலத்தின் சோலன் மாவட்டத்தில் ரேஷன் அட்டைதாரர்கள் கேஒய்சி விவரங்களை இணைத்து வருகின்றனர். இதுவரை 67% பயனாளிகள் இந்த பணியை முடித்துள்ளார்கள்.
எனவே, கேஒய்சி விவரங்களை முடிக்காதவர்கள் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொடுக்கப்பட்ட கால அவகாசத்திற்குள் முடிக்கவில்லை என்றால் தற்காலிகமாக ரேஷன் கார்டு செய்தவர்கள் நிறுத்தப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.