fbpx

இளைஞர்களே உஷார்..!! உடல் எடையை குறைக்க மருந்து வாங்கி சாப்பிட்ட வாலிபர் திடீர் மரணம்..!! காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி..!!

உடல் எடையை குறைப்பதற்காக மருந்து வாங்கி சாப்பிட்ட வாலிபர் உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ள பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சோமங்கலம் கருணீகர் தெருவைச் சேர்ந்தவர் சூர்யா (20). இவர், தனியார் பால் பாக்கெட் விநியோகம் செய்யும் தொழில் செய்பவர். இவர் மிகவும் பருமனாக இருந்ததால் தனது உடல் எடையை குறைப்பதற்காக தனியார் நிறுவனத்தை நாடியுள்ளார். தனியார் நிறுவனம் வழங்கிய உடல் எடையை குறைப்பதற்கான மருந்துகளை வாங்கி 10 நாட்களாக அந்த மருந்துகளை சாப்பிட்டதாகவும், இதில் சூர்யாவுக்கு மிக வேகமாக உடல் எடை குறைந்ததாக கூறப்படுகிறது.

இளைஞர்களே உஷார்..!! உடல் எடையை குறைக்க மருந்து வாங்கி சாப்பிட்ட வாலிபர் திடீர் மரணம்..!! காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி..!!

இந்நிலையில், கடந்த 1ஆம் தேதி இரவு சூர்யாவுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. இதனால், அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சூர்யா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக
உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Chella

Next Post

அதிர்ச்சி..!! ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் மாரடைப்பால் மரணம்..!! அரசியல் தலைவர்கள் இரங்கல்..!!

Wed Jan 4 , 2023
ஈவிகேஎஸ் இளங்கோவன் மகனும், காங்கிரஸ் எம்.எல்.ஏ-வுமான திருமகன் ஈவெரா மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 46. காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். முன்னாள் மத்திய அமைச்சரான இவருக்கு திருமகன் ஈவெரா, சஞ்சய் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இதில், திருமகன் ஈவெரா தனது தந்தையை போல அரசியலில் ஈடுபட்டு வந்தார். இவர் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற தொகுதியில் […]
அதிர்ச்சி..!! ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் மாரடைப்பால் மரணம்..!! அரசியல் தலைவர்கள் இரங்கல்..!!

You May Like